தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ள. தினசரி பாதிப்பில் கோவை நான்காம் இடத்தில் உள்ளது. கோவையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இந்நிலையில் கோவையில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 261 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.


கோவையில் இன்று 863 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 57 ஆயிரத்த 424 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3574 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 191பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 323 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2527ஆக உள்ளது.


ஈரோடு,, திருப்பூர்,, நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் இன்று 242பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 119 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 108720 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 107232 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 712 ஆக உள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 253 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 15 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 73 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 100074ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97795 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1029 ஆக அதிகரித்துள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 29 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 19 பேர் குணமடைந்துள்ள நிலையில், 399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 34886 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34267ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 220ஆக உள்ளது.