கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் காரணமாக தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. கோவையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 23 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.


கோவையில் இன்று 3763 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 95 ஆயிரத்த 184 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 26178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 2384 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 458 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2548ஆக அதிகரித்துள்ளது.


ஈரோடு,, திருப்பூர்,, நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் இன்று 1229 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 30 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 742 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 7332 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 119833 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 111779 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 722 ஆக உள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1490 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 14 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 864 பேர் குணமடைந்துள்ள நிலையில், 7935 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 112184 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 103214 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1035 ஆக உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 407 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 9 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 338 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 38823 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36381 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 223ஆக உள்ளது.