தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், கோவை இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. கோவையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த நிலையில், கோவையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 263 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.


கோவையில் இன்று 3653 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 79 ஆயிரத்த 225 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 18236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 1383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 447 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2542ஆக அதிகரித்துள்ளது.


ஈரோடு,, திருப்பூர்,, நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் இன்று 973 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 54 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 4949 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 115031 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 109361 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 721 ஆக உள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 958 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 61 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 491 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4844 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 106127 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 100249 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 270 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 28 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 215 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 37216 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35207 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 222ஆக உள்ளது.