கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக  தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 180 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 27 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில்  2388 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 312 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 113 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 6 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2147 ஆக உள்ளது. கோவையில் கொரோனா தொற்று விகிதம் 2.1 ஆக குறைந்துள்ளது.


ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்




ஈரோட்டில் இன்று 37 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 4 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 205 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 92452 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89968 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 626 ஆக உள்ளது. ஈரோட்டில் தொற்று விகிதம் 2.0 ஆக உள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 94 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 126 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 87015 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 84665 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 815 ஆகவும் உள்ளது. திருப்பூரில் கொரோனா தொற்று விகிதம் 1.9 சதவீதமாக குறைந்துள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 60 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 8 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 82 பேர் குணமடைந்துள்ள நிலையில், 816 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 30073 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29084 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 173 ஆக உள்ளது. நீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 1.9 ஆக உள்ளது.


கொரோனா தொற்று பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.