உருமாறிய கொரோனா எதிரொலியாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் அதற்கான மையம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.


பல நாடுகளில் உருமாறிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது இந்த நிலையில், நாளை முதல் பயணிகளை கண்காணிக்க மீண்டும் தெர்மல் ஸ்கேனரை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் இன்று முதல் பயணிகளைக் கண்காணிக்கும் பணிகள் கோவை விமான நிலையத்தில் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், “கோவை விமான நிலையத்திற்கு 2 வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன. அதிகாலையில் ஏர் அரேபியா விமானம், இரவு சிங்கப்பூர் விமானம் என இரண்டு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் 400 பேர் சராசரியாக கோவை வருகின்றனர்.  விமானத்தில் வரும் 2 சதவீத பயணிகளின் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றது.




நேற்று இரவு முதல் சர்வதேச விமானத்தில் வரும் பயணகள் சோதனைக்கு உட்படுத்தபடுகின்றனர். அவர்களில் இதுவரை யாருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை. மொத்தம் 22 விமானங்கள் உள்நாட்டு விமானங்கள் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படுகிறது. இதில் வரும் பயணிகளை கண்காணிக்கவும், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயணிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் தெர்மல் ஸ்கேன் முறை செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் வரும் பயணிகள் அனைவரும் தெர்மல் ஸ்கேன் முறையில் அவர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது. பயணிகளுக்கு நோய் தொற்று இருந்தால், அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு 14 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள். விமான நிலையம் முழுவதும் தொடர்ந்து கிருமிநாசினி அடிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்திலேயே ஐசலேஷன் ரூம் தயார் செய்யப்பட்டு உள்ளது. 




அதேபோல ஆர்டிபிசிஆர் பரிசோதனையாக அறை தயார் நிலையில் உள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களின் பெயரில் பயண சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. சளி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் பயணிகளுக்கு மட்டும் ஆர்டிபிசியால் பரிசோதனை செய்யப்படுகிறது. முகக்கவசம் அணிவது தனி மனித இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சுழற்சி முறையில் பணியாளர்கள் விமான நிலையத்தில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண