கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் குறையத் துவங்கியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சென்னையை விட கோவையில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருதிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. மே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தை அடைந்து வந்த நிலையில், மே இறுதி வாரத்தில் இருந்து தொற்று பாதிப்புகள் குறையத் துவங்கியது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல தொற்று பாதிப்புகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மே இறுதி வாரத்தில் இருந்து தொற்று பாதிப்புகள் குறையத் துவங்கியது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல தொற்று பாதிப்புகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தினசரி பாதிப்பு இதுவரை இல்லாத வகையாக கடந்த 27ம் தேதி 4734 ஆக பதிவானது. அதன் பிறகு தொற்று பாதிப்புகள் குறையத் துவங்கியது. மே 28ம் தேதி 3992 ஆகவும், 29ம் தேதி 3692 ஆகவும், 30ம் தேதி 3537 ஆகவும், 31ம் தேதி 3488 ஆகவும், ஜீன் ஒன்றாம் தேதி 3332 ஆகவும், இரண்டாம் தேதி 3061 ஆகவும் குறைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இன்று மேலும் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று 2810 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 82708 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 35694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றும் கொரோனா தொற்று பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று 4590 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45589 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் உயர்ந்து வந்த நிலையில், இன்று உயிரிழப்புகள் சற்று குறைந்துள்ளது. நேற்று 48 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். இன்று 31 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1425 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறைந்து வருவது கோவை மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கோவை மாநகராட்சி பகுதியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள் கையிருப்பு குறைந்ததால், நாளை தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் செலுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஆனால் முறையாக தடுப்பூசிகள் செலுத்தப்படுவதில்லை என்பது பொதுமக்களின் புகாராக உள்ளது. தடுப்பூசி வரத்து காரணமாக கடந்த 3 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வந்த நிவையில், கையிருப்பு குறைந்ததால் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.