கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் கந்துவட்டி தொடர்பான புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட, கோட்ட மற்றும் வட்ட அலவிலான குழுக்கள் கரூர் ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடுத்தர மற்றும் வறுமையில் வாடும் மக்களின் குடும்ப தேவைக்காக வாங்கும் கடனுக்கு அவர்களின் அவசரத் தேவையை பயன்படுத்தி கடன் கொடுப்போர் கந்து வட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி என வட்டி வசூலிக்கின்றனர். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கடன் வாங்கிய மக்கள் வட்டியும் கட்ட இயலாமல் அசலும் தர முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பணத்தை வசூலிக்க அடியாட்களை வைத்து மிரட்டி கந்துவட்டி வசூலில் கடன் கொடுத்தவர்கள் ஈடுபடுகின்றனர். 




 


இதனைதடுக்க 1957ம் ஆண்டு தமிழ்நாடு கடன் கொடுப்பவர் நெறிப்படுத்தும் சட்டமும், 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு கந்து வட்டி வசூலித்தல் தடைச்சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாதம் தோறும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளடக்கிய சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X



தற்சமயம் கொரோனா காலகட்டத்தில்  வாங்கிய கடன்களை அடைக்க முடியாத சூழலில் மக்கள் பலர் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதது. எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவும், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கோட்ட அளவிலான குழுக்களும்,  வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் வட்ட அளவிலான குழுக்களும், அமைக்கப்பட்டுள்ளன.




இக்குழுக்கள் கந்து வட்டி தொடர்பான புகார்களை உடனடியாக விசாரித்து கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக வாரம் தோறும் ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கீழ்கண்ட முகவரிகளில் கந்து வட்டி தொடர்பான புகார்களை அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்டத்தின் பிரத்தியோக வாட்ஸ்அப் எண் 94898 40055, 1091 மூலமாகவோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக ட்விட்டர் Twitter @Collectorkarur என்ற முகவரி மூலமாகவோ, வருவாய் கோட்டாச்சியர்கள் 04324-274038, வாட்சாப் எண் 9445000453 (கரூர்), 04323-222395, வாட்சாப் எண் 9445000454 (குளித்தலை) வட்டாச்சியர்கள் 04324-260745, வாட்சாப் எண் 9445000598, (கரூர்) 04323-222015  வாட்சாப் எண் 9445000600 (குளித்தலை) 04320-230170, வாட்சாப் எண் 9445000599 (அரவக்குறிச்சி) 04323-243950, வாட்சாப் எண் 9445000601 (கிருஷ்ணராயபுரம்) 04323-251444, வாட்சாப் எண் 9445461822 (கடவூர்) 04324-288334, வாட்சாப் எண் 9445461817 (மண்மங்கலம்) வாட்சாப் எண் 7200440680 (புன்செய் புகளுர்) ஆகிய அலுவலர்களின் தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 





 ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் கந்துவட்டி புகார்களுக்கு என்று பிரதியோகமாக தபால் பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.