கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. பல நாட்களுக்கு பிறகு, நேற்று தினசரி பாதிப்பில் சென்னை மீண்டும் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் இன்று கோவையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தன் காரணமாக, தினசரி பாதிப்பில் மீண்டும் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 13 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவையில் இன்று 186 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 36 ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 951 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2268 ஆக அதிகரித்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோட்டில் இன்று 137 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 4 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 98545 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 96510 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 657 ஆக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 92 பேர் குணமடைந்துள்ள நிலையில், 749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 90380 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88699 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 932 ஆக அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 31 பேர் குணமடைந்துள்ள நிலையில், 326 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 31782 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31261 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 195 ஆக உள்ளது.