தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம். கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (05.09.24) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (05.09.24) செங்கத்துறை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செங்கத்துறை, கவுந்தம்பாடி, ஏரோ நகர், மதியழன் நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவை வடக்கு மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியிலும், கோவை தெற்கு மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட மதுக்கரை, அறிவொளி நகர், சீரப்பாளையம் பாலத்துறை, ஏ.ஜி.பதி ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் மின்தடை
நாளை மறுநாள் (06.09.24) அன்று கள்ளிமடை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காமராஜர் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் காலேஜ், கோவை விமான நிலையம், வி.ஆர். புரம், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், ஜி.வி. ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதேபோல கோவை வடக்கு மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியிலும் மின் தடை செய்யப்பட உள்ளது. கோவை தெற்கு மின்பகிர்மான கழகத்தில் அரசூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட செல்லப்பபாளையம், வகராயாம்பாளையம், நீலம்பூர், குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கேற்ப பொதுமக்கள் தங்களின் பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின் தடை குறித்த அறிவிப்புகள் மின் நுகர்வோர்களின் செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.