உலகை உலுக்கி வரும் கொரோனா தற்போது இரண்டாவது அலையாக பல்வேறு மாநிலங்களில் அதன்  தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை தடுத்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தின்பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாட பரவலாக உள்ளது. 




தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சில மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஒரு சில மையத்தில் தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரத்தில் பொதுமக்கள் தடுப்பூசிக்கு 700 பொது மக்கள் ஒரே இடத்தில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




அதைத் தொடர்ந்து நாள்தோறும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முந்தைய நாள் டோக்கன் வழங்கும் முறையை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தியது. இருந்த போதிலும் கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.  இந்நிலையில் இன்று காலை 7-ம் தேதிக்கான தடுப்பூசி போட்டுக்கொள்ள டோக்கன் கொடுத்து விட்டு திடீரென்று தற்போது ஊசி இல்லை என அதிகாரிகள் கூறியது அங்கு வந்திருந்த பொதுமக்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.




தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆலோசனைக் இணங்க மாவட்ட நிர்வாகத்தின் சுகாதாரத் துறையின் இதுவரை கரூர் மாவட்டத்தில் 1,16,466 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்கள் வசதிக்காக 30-க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,இன்று 7ஆம் தேதியில் தடுப்பூசி போடுவதற்காக மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.


அதனைத் தொடர்ந்து, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாள்தோறும் 200 முதல் 300 பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து டோக்கன் பெற்றவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குவிந்தனர். இந்த நிலையில், தடுப்பு ஊசி மையங்களில் இன்று தடுப்பூசி இல்லை என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.


இதைத் தொடர்ந்து, கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தடுப்பூசி மையத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் அவர்களை தடுப்பூசி இல்லை எனக் கூறி கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் வாக்குவாதம் தள்ளுமுள்ளாக முடிந்தது. அதிகாரிகள் எஸ்கேப் ஆன நிலையில் போலீசார் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டனர்.