நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் எனவும், நாட்டைக் காப்பாற்ற ஒரு விஜய் அல்ல, ஓராயிரம் விஜய் வந்தாலும் சந்தோசம் தான் என நடிகர் ரஞ்சித் தெரிவித்தார்.


வேல் யாத்திரை:


ஈரோடு மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னிமலை முருகன் கோயிலில் இருந்து, பழனி முருகன் கோவில் வரை வேல் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித், முன்னாள் காவல் துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் மற்றும் ஏராளமான இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வேல்களுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அரசியல்வாதி தான் என்றார்.


விஜய் அரசியலுக்கு வர வேண்டும்:


நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவர்,  நாட்டைக் காப்பாற்ற ஒரு விஜய் அல்ல, ஓராயிரம் விஜய் வந்தாலும் சந்தோசம் தான் எனத் தெரிவித்தார். நடிகர் விஜயகாந்த் காலமானதிற்கு நடிகர் வடிவேலு ஒரு இரங்கல் அறிக்கை விட்டு இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், ஒவ்வொரு இளைஞரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து நல்லவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் திருடர்கள் சேர் போட்டு அமர்ந்து விடுவார்கள் என்றார்.


மேலும் படிக்க : Vijay GOAT 2nd Look: புத்தாண்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்! G.O.A.T. படத்தின் 2வது போஸ்டர் - குஷியல் ரசிகர்கள்!