கோவை விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலையில் பேருந்தை பிடித்தபடி காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணி ஸ்கேட்டிங் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை மாநகர பகுதிகளில் முக்கிய பிரதான சாலை கோவை - அவினாசி சாலை விளங்கி வருகிறது. பன்னாட்டு விமான நிலையம், பல்வேறு கல்லூரி, பள்ளிகள் நிறைந்த இச்சாலை எப்போதும், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே உள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். 



இந்நிலையில் கோவை - அவிநாசி சாலையில் திருப்பூரில் இருந்து ஒரு அரசுப் பேருந்து கோவை நோக்கி வந்தது. அப்போது கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வெளிநாட்டவர் ஒருவர், காலில் சக்கரங்களை கொண்ட ஸ்கேட்டிங் ஷூ அணிந்தபடி வந்தார்.  அந்த நபர் அரசுப் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு கம்பியை பிடித்தபடி நின்றார். அரசு பேருந்து கிளம்பிய போது, அந்த பேருந்தை பிடித்தபடி, ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் செய்தபடி செய்தார். சித்ரா பகுதியில் இருந்து ஹோப்ஸ் காலேஜ் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அவினாசி சாலையில் வெளிநாட்டவர் ஸ்கேட்டிங் செய்த காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த காட்சிகளை வாகனத்தில் சென்ற நபர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஆபத்தை உணராமல் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பரபரப்பான அவினாசி சாலையில் ஓடும் பேருந்தில் ஸ்கேட்டிங்  செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.


இந்த காட்சிகளின் அடிப்படையில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்மிக தலங்கள் அல்லது சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக வந்த சுற்றுலா பயணி, இந்த முறையில் ஸ்கேட்டிங் செய்திருப்பதாக தெரிகிறது. அதேசமயம் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் அவரது விபரங்கள் உள்ளிட்டவை இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண