இஸ்லாமுக்கு மதம் மாற மறுத்த மாப்பிள்ளை...! சம்பந்தியை கொலை செய்ய வாட்ஸ் அப்பில் திட்டம் திட்டிய பெண் வீட்டார்...!

கல்கத்தாவை சேர்ந்த ஒருவரிடம் துப்பாக்கி வாங்கி பேசிய நிலையில், தகவலறிந்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

Continues below advertisement

கோவையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்ய வாட்ஸ் ஆப்பில் திட்டம் தீட்டில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்து செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன். இவரது மகன் அருண்குமார் (28) ஹைதராபாத்தில் உள்ள தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக சொந்த ஊரில் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் ஹைதராபாத்தில் பணியாற்றி போது, அங்கு தங்கியிருந்த திருவாரூரை சேர்ந்த சஹானா என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இருவரும் அருண் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு கோவையில் வசித்து வருகின்றனர். 

Continues below advertisement

திருமணத்திற்கு பிறகு இசுலாமியரான சஹானா இந்து மதப்படி மாறி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சஹானாவின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள், அருணை இசுலாமிய மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தி வந்துள்ளனர். இதற்கு அருணின் தந்தையான குமரேசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சஹானாவின் உறவினர்கள் வைத்துள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இது தொடர்பாக விவாதித்து வந்துள்ளனர். அப்போது அவரது உறவினர்கள், குமரேசனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், இது தொடர்பாக கல்கத்தாவை சேர்ந்த ஒரு நபரிடம் துப்பாக்கி வாங்க தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த தேசிய புலனாய்வு முகமை, இது தொடர்பாக கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து விசாரணை நடத்திய காவல் துறையினர் ஈரோடை சேர்ந்த முகமது அலி ஜின்னா, திருச்சியை சேர்ந்த இம்ரான்கான், சதாம் உசேன், சென்னையை சேர்ந்த பக்ருதீன் மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராம்வீர் அஜய் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும் துப்பாக்கி விற்பனையாளர்களுடன் இவர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு சதி, சாதி, மத, இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்னர். சஹானாவின் தாய் நூர்நிஷா திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணி நிர்வாகியாக இருந்து வருகின்றார். வாட்ஸ் ஆப்பில் குழுவில் கொலை செய்ய திட்டமிட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola