கடந்த  இரண்டு நாட்களாக சென்னை முழுவதும் பல்வேறு சாலைகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூதன முறையில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் ஜீரோ இஸ் குட் ( Zero is Good ) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த நூதன அறிவிப்பு பலகைகளை, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வைத்துள்ளனர்.




Zero is Good


மஞ்சள் நிற பலரில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த அறிவிப்பு பலகை பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே போன்று ஒரு சில ஆட்டோக்கள் பின்புறத்திலும் இதே வாசகம் பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து நிறுத்தத்திலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே கவனத்தைப் பெற்று வருகிறது. பலரும் இந்த வாசகம் எதற்கு வைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் என்ன விழிப்புணர்வை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தப்பட உள்ளனர் என குழும்பி இருக்கின்றனர்.  நாம் இந்த செய்தி தொகுப்பில், வாகன ஓட்டிகள் என்ன நினைக்கிறார்கள், பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் எதற்காக இந்த பதாகை வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.


 





அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில்  விபத்துக்கள் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை சாலை விபத்துக்கள் என்பது குறைவாகவே இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் சாலை விபத்துக்கள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம், சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றுவதுதான் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 


 


நூதன முறையில்...


 


அந்த வகையில் இந்தியா போன்ற நாடுகளில் சாலை விபத்துக்கள் குறைக்க, சாலை விதிகளை பின்பற்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துகளை குறைக்க, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவப்பொழுது நூதன முறையில் சென்னை போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


 




சாலையில் பல இடங்களில் திடீரென ஒரு குறிப்பிட்ட வாசகங்களை கொண்ட, பேனர்கள், அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். சில நாட்கள் கழித்து அந்த அறிவிப்பு எதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இது போன்ற சென்னை மாநகரப் போக்குவரத்து போலீசார் நூதன முறையில், விழிப்புணர்வு ஏற்படுத்துவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது.


 


 மக்கள் கூறுவது என்ன ?



இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில், சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு சிலர் விபத்திலா சென்னை மாநகரை குறிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஒரு சிலர் u Turn விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இது குறித்த அறிவிப்பாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். 


 


 போலீசார் கூறுவது என்ன ?


சமூக வலைதளத்தில் சிலர் , மாநகராட்சி போக்குவரத்து காவல்துறையை விமர்சனமும் செய்து இருக்கின்றனர். சாலையை சரி செய்ய வேண்டும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், வாகனங்களை கண்காணிக்க வேண்டும் இதையெல்லாம் செய்தால் நல்லது எனவும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.




 


இந்த விழிப்புணர்வு பலகைகள் எதற்காக வைக்கப்பட்டது என்பது குறித்து போக்குவரத்து துறை காவலர்களிடம் கேட்ட பொழுது : " விரைவில் இந்த விழிப்புணர்வு அறிவிப்புகள் எதற்காக வைக்கப்பட்டது என்பது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் " என தெரிவிக்கின்றன