செம்பரம்பாக்கம் பகுதியில் பெய்த கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது


 


செம்பரம்பாக்கம் ஏரி 


 


சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில், பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஏரிகளில் இருந்து மழை காரணமாக தண்ணீர் வருவது வழக்கம்.


செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?


ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் கனமழையை பெய்ததின் எதிரொலியாக, ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் விடிய விடிய பெய்த கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 577 கனஅடியாக அதிகரித்துள்ளது. தற்பொழுது செம்பரம்பாக்கம் ஏரி தனது 24 அடியில் 14.50 அடி நீரை கொண்டுள்ளது. ஏரியில் தற்பொழுது 1.4 டிஎம்சி நீர் கையெழுப்பு உள்ளது. ஏரியிலிருந்து குடிநீர், சிப்காட் உள்ளிட்ட தேவைக்காக சுமார் 149 கன அடி வெளியேறிக் கொண்டிருக்கிறது



 காஞ்சிபுரத்தில் கனமழை



காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவு காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வந்தது.


காஞ்சிபுரம் மாவட்டத்தை இப்படி பொறுத்தவரை அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 8.04 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் 6.96 சென்டிமீட்டர் மழையும், உத்திரமேரூரில் 4.5 சென்டிமீட்டர் மழை, வாலாஜாபாத்தில் 3.6 சென்டிமீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 7.42 சென்டிமீட்டர் மழையும், குன்றத்தூரில் நான்கு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


 


 


வானிலை மையம் எச்சரிக்கை:


முன்னதாக நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று என்று” எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.