காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவு காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வந்தது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையின்படி காஞ்சிபுரம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் குளிர் காற்று வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த மழை பொது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. இருந்தும் காஞ்சிபுரம் நகர் பகுதியில் மழை காரணமாக காலை 3 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் 6 மணிக்கு தான் மீண்டும் வந்தது.
மின்சாரம் தடைபட்டு இருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.அதேநேரம், சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலை மழை தொடர்வதால காலை நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் நடைபய்ற்சி மேற்கொள்பவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இவ்வளவு மழை பெய்துள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தை இப்படி பொறுத்தவரை அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 8.04 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் 6.96 சென்டிமீட்டர் மழையும், உத்திரமேரூரில் 4.5 சென்டிமீட்டர் மழை, வாலாஜாபாத்தில் 3.6 சென்டிமீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 7.42 சென்டிமீட்டர் மழையும், குன்றத்தூரில் நான்கு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது
வானிலை மையம் எச்சரிக்கை:
முன்னதாக நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று என்று” எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மழை தொடர வாய்ப்பு - வானிலை அறிக்கை:
வானிலை மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக எழும்பூர்,கிண்டி,மதுரவாயல்,மாம்பலம்,மயிலாப்பூர்,தாம்பரம்,திருத்தணி,உத்திரமேரூர்,வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், அமைந்தக்கரை,அயனாவரம்,கலவை,பெரம்பூர்,புரசைவாக்கம்,மாதவரம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.