திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் கிழ்ச்சேரியில் அமைந்துள்ள கிறைஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் 736 பானைகளில் தமிழர்களின் அடையாளங்களைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் கண்கவரும் ஓவியங்களை வரைந்து உலக சாதனை விழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டது : பசுமைத் தாயகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சவுமியா அன்புமணி பங்கேற்றார்.



திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் கிழ்ச்சேரியில் அமைந்துள்ள கிறைஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  சமத்துவ பொங்கல் விழா மற்றும் சாதனை விழா  பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பசுமைத் தாயகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சவுமியா அன்புமணி virtue book of world records யின் முதன்மை தீர்ப்பாளர் கார்த்திகேயன் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை மெருகூட்டும் வகையில் பானையில் ஓவியம் வரைந்து உலக சாதனை படைக்கும் நிகழ்வும் அரங்கேறியது. 

 



 

இதில் 736 பானைகளில் தமிழர்களின் அடையாளங்களைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் கண்கவரும் ஓவியங்களை வரைந்து உலக சாதனை  படைத்திருந்தனர். பானைகளில் வரையப்பட்ட வண்ணமயமான ஓவியங்கள் அனைவரையும் கவர்ந்தது. இதற்கான உலக சாதனை விருது வழங்கப்பட்டது.இம்மாபெரும் சாதனை நிகழ்த்த அறிவியல் துறை முதன்மைர் அருட்தந்தை பிரதீப் கிறிஸ்டோபர் வழிகாட்டியாக இருந்தார். பொங்கல் விழாவையும் உலக சாதனை நிகழ்வினையும் ஒருங்கிணைப்புச் செய்யும் பணியினைத் தமிழ்த்துறையானது மேற்கொண்டது. இது குறித்து  பசுமைத் தாயகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சவுமியா அன்புமணி கூறுகையில் கிழ்ச்சேரியில் அமைந்துள்ள கிறைஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  சமத்துவ பொங்கல் விழா மற்றும் சாதனை விழா கொண்டாடப்பட்டது.

 



இவ்விழாவில் 736 பானைகளில் தமிழர்களின் அடையாளங்களைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் கண்கவரும் ஓவியங்களை வரைந்து உலக சாதனை  படைத்த அனைவரையும் வாழ்த்துவதற்காக பசுமை தாயகம் சார்பாக கலந்து கொண்டோம்.கீழடியிலும்,ஆதிச்சநல்லூரிலும் பானைகள் மூலமாக தமிழ்குடியுடைய மூத்த வயது என்ன என்று  அறிந்து கொண்டுள்ளோம்.அதே போல் இந்த மாணவர்களுடைய பானை 2 ஆயிரம் வருடங்கள் கழித்து கிடைக்கும் போது தமிழ்நாட்டின் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை 5 ஆயிரம் வருடங்கள் கழித்து கண்டுபிடிப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட சாதனை மாணவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'

 

பசுமை தாயகம் மூலமாக சென்னையில் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை தமிழகம் முழுவதும் கொண்டுவர வேண்டும் என்று கூறினார். இவ்விழாவில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார்,  கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன்,  முன்னாள் மாவட்ட செயலாளர் பூபதி, கல்லூரியின் செயலர் தந்தை ஹாரி வில்லியம்ஸ், முதல்வர் தந்தை அருள் மணி ஜோசப் மற்றும் துணை முதல்வர் அரவிந்தன்,மாணவ மாணவிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.