பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதையடுத்து, வெளியூர் செல்லும் பேருந்துகள் புறப்படும் 5 இடங்களையும் இணைக்கும் வகையில் 340 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக இந்த பேருந்து சேவையை போக்குவரத்து துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகளில் சென்னையில் இருந்து மட்டும் வரும் 3 நாட்களுக்கு கூடுதலாக 4 ஆயிரத்து 449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6 ஆயிரத்து 183 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நாளை முதல் பேருந்துகள்:
சென்னையில் இருந்து நாளை வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் 651 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மற்ற நகரங்களில் இருந்து 1508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் சென்னையில் இருந்து 1855 சிறப்பு பேருந்துகளும், பொங்கலுக்கு முதல் நாளான 14-ந் தேதி 1943 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
வெளியூர் செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமின்றி, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
புகார் எண்கள்:
தமிழ்நாடு முழுவதும் இதுவரை சிறப்பு பேருந்துகளில் செல்வதற்காக மட்டும் 1.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் ஏதேனும் புகார்கள் இருந்தால் 9445014450, 9445014436 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Afghanistan Bomb Blast: ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சகத்தின் கட்டிடத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு... தொடர் பதற்றம்...!
மேலும் படிக்க: Afghanistan Bomb Blast: ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சகத்தின் கட்டிடத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு... தொடர் பதற்றம்...!