மெரினா கடற்கரை பகுதியில் புலப்படும் காவல் பணியை மேம்படுத்தும் முக்கிய நோக்கத்துடன், குறிப்பாக இரவு நேரங்களில் உதவி தேவைப்படும் பொதுமக்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முக்கிய புள்ளியில் புதிய சூரிய சக்தியில் இயங்கும் அவுட்-போஸ்டை (OP) சென்னை காவல்துறை (ஜிசிபி) நிறுவியுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"இது குற்றவாளிகளைத் தடுக்கும் வகையில் செயல்படுவதோடு, மக்கள் அதிகம் கூடும் போது பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். காணாமல் போன குழந்தைகளைப் புகாரளிப்பதிலும், அவற்றைக் கண்டுபிடிப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தவிர, கடலோரப் பாதுகாப்புக் குழுவின் (சிஎஸ்ஜி) காவலர்களும் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கரையோரத்தில் மின்னும் விளக்குகளுடன் போலீஸ் வாகனத்தில் ரோந்து செல்கின்றனர்.
GCP மெரினா ரோந்துப் பணிகளுடன் இணைந்து CSG தற்கொலைக்கு முயற்சிப்பவர்களைக் தடுப்பதிலும், பொதுமக்களை நீரில் மூழ்காமல் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன என குறிப்பிடப்பட்டிருந்தது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த போலீஸ் பூத்துகள், இரவில் வண்ண ஒளி வெள்ளத்தில் காட்சி அளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடலில் குளிக்கும் ஆசையில், அலைகளில் சிக்கி இளைஞர்கள் உயிரை விடும் சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளது. தகவல்களை பரிமாறி கொள்ள 'வாட்ஸ்-அப்'குழு ஒன்றும் போலீசார் மத்தியில் தொடங்கப்பட்டுள்ளது. கடலோர காவல் குழுமத்தினரும் போலீசாருடன் அங்கு காவல் பணியில் ஈடுபடுவார்கள். மெரினாவில் இரவில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கமும் இதில் அடங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.