இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா தொடர்ச்சியில் வொண்டர்லா, தமிழ்நாட்டின் முதல் மற்றும் நாட்டின் ஐந்தாவது பூங்காவான வொண்டர்லா பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பூங்கா 2025 டிசம்பர் 2 முதல் பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.
வொண்டர்லா பூங்கா - Chennai Wonderla Amusement Park
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள தகவலில், 611 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தொடங்கப்பட்ட வொண்டர்லா சென்னை, தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மயில்கல்லாக அமைந்தது. இந்த பூங்காவில் 43 உலகத் தரம் வாய்ந்த சவாரிகள் உள்ளன, அவை தினமும் 6,500 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
டிக்கெட் விலைகள் ரூ1,489 இல் தொடங்குகின்றன, ஆரம்பகால ஆன்லைன் முன்பதிவுகளில் 10% தள்ளுபடி மற்றும் ஒரிஜினல் ஐடிகளை வைத்திருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு 20% சலுகையும் மற்றும் குழுக்கள் மற்றும் விழா கால பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகள் உள்ளன.
நிர்வாகம் கூறுவது என்ன?
தொடக்க விழாவில் பேசிய வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் அருண் K. சிட்டிலப்பிள்ளி கூறுகையில்: "வொண்டர்லா சென்னை தொடங்கப்பட்டது எங்கள் போழுதுபோக்கு பூங்கா பயணத்தில் தமிழ்நாடு ஒரு துடிப்பான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய மாநிலம், மேலும் வரும் ஆண்டுகளில் அதன் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சுற்றுச்சூழல் அமைப்பில் மேலும் முதலீடு செய்யவும், விரிவுபடுத்தவும், பங்களிக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். வொண்டர்லா சென்னை நாளை பொதுமக்களுக்கு திறக்கப்படுவதால், பிராந்தியம் முழுவதிலுமிருந்து வரும் விருந்தினர்களை வரவேற்கவும், மாநிலத்துடன் நீண்டகால கூட்டாண்மையை உருவாக்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
தமிழ்நாட்டின் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மகாபலிபுரம் பகுதியில் அமைந்துள்ள வொண்டர்லா சென்னை, ஒரு முக்கிய சுற்றுலா வினையூக்கியாக மாறத் தயாராக உள்ளது, இது பிராந்தியத்தின் குடும்ப பொழுதுபோக்கு ஈர்ப்பை அதிகரிக்கும் அதே வேளையில் துணை வணிகங்களையும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படும் என தெரிவித்தார்.
வொண்டர்லா சென்னையின் ரூ611 கோடி முதலீடு, தமிழ்நாட்டின் வலுவான தொழில்துறை வளர்ச்சிப் பாதையுடன் சரியாக ஒத்துப்போகிறது. 2021 முதல், தமிழ்நாடு ரூ10,07,974 கோடி முதலீடுகளை ஈர்த்து 893 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது மற்றும் 31 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. வொண்டர்லா சென்னை சுமார் 1,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்த உந்துதலுக்கு பங்களிக்கிறது, இதில் 720 நேரடி பதவிகள் பெரும்பாலும் உள்ளூர் பகுதியில் இருந்து பணியமர்த்தப்படுகின்றன.
கூடுதல் சிறப்புகள் என்னென்ன ?
கூடுதலாக, தஞ்சாவூர் பொம்மைகள் மற்றும் மரப்பாச்சி பொம்மைகளில் நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் கைவினைஞர்களுடன் இந்த பிராண்ட் உறவுகளை ஏற்படுத்தி உள்ளூர் கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது, அதே நேரத்தில் விருந்தினர்களுக்கு உண்மையான கலாச்சார அனுபவங்களை வழங்குகிறது.
சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில், இந்தப் பூங்காவில் 3.75 கோடி லிட்டர் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, 1,000 KW சூரிய சக்தி பேனல்கள் (கட்டம் 2), 1,000 பூர்வீக மரங்களைக் கொண்ட 32,000 சதுர மீட்டர் பசுமையான இடங்கள், உள்ளூர் மூலப்பொருட்கள் மற்றும் இயற்கை காற்றோட்டம் ஆகியவை உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு சுற்றுச்சூழல் மேலாண்மையுடன் இணைந்து செயல்படுவதை உறுதி செய்கின்றன என தெரிவித்தார். தமிழக அளவில் மிக முக்கிய சுற்றளவு தளமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.