தேசிய மீட்பு படையின் டிஐஜி ஆலோசனை

Continues below advertisement


சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் டிட்வா புயலால் வடகடலோர மாவட்டங்களில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அங்குள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேசிய பேரிடர் மீட்பு படையின் டிஐஜி ஹரி ஓம் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். 


நேற்று இரவு டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் , வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கட்டுபாட்டு மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் தேசிய பேரிடர் மீட்பு படையின் டிஐஜி ஹரி ஓம் காந்தி விவரங்கள் மற்றும் சூழல்களை கேட்டறிந்தார்.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய பேரிடர் மீட்பு படையின் டிஐஜி ஹரி ஓம் காந்தி பேசியதாவது


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 25 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 22 குழுக்களும் புதுச்சேரியில் 3 குழுக்களும் உள்ளது. 


அதில் சென்னையில் மட்டும் 6 குழுக்கள் தயாராக உள்ளது. குறிப்பாக மணலியில் 2 குழுக்கள் கிண்டியில் 1 குழு மற்றும் வடபழனியில் 2 குழுக்கள் மற்றும் எழும்பூரில் ஒரு 1 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயாராக உள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு தேவைப்பட்டால் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வர வைக்கப்படும்.


தற்போது வரை வடகடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்புகள் இல்லை , எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்று மீட்பு பணிகள் மேற்கொள்ளும் அளவிற்கு பாதிப்புகள் இல்லை.


மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் உள்ள இடங்களுக்கு சென்று அவர்கள் தயாராக உள்ளார்களா என ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.


டிட்வா புயல் நேற்று ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு தேவைப்படும் பட்சத்தில் புனே மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வர வைக்கப்படும்.


ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுக்களில் பத்து குழுக்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான் என தெரிவித்தார்.