வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் என்றால் என்ன ? 

 

வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் என்பது ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்கு தளத்தில் பயன்படுத்தப்பட App ஆகும். இது தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் படங்கள், வீடியோக்கள், குரல் மற்றும் காணொலி அழைப்புகள் , உரையாடல்கள் மேற்கொள்ளலாம். மேலும் , வாட்ஸ் அப்-ல் குழுக்களை உருவாக்கி உரையாடலாம்.

 

வாட்ஸ் அப்பின் , டெலிகிராம் ஆப்பின் முக்கிய பயன்கள் ;

1. உடனடி செய்தி அனுப்புதல் ;

Continues below advertisement


உரைச் செய்திகள், குரல் செய்திகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகளை அனுப்பலாம்.


2. அழைப்புகள் ;


உலகளவில் இலவசமாக குரல் மற்றும் காணொலி அழைப்புகளை மேற்கொள்ளலாம்.


3. குழு உரையாடல்கள் ;


ஒரே நேரத்தில் பலருடன் பேச குழுக்களை உருவாக்கலாம்.


4. நிலை ;


வாட்ஸ் அப் நிலை (Status) அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுடன் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிரலாம்.


5. இணைய வழிப் பயன்பாடு ;


கணினியிலும் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்த முடியும். 


வாட்ஸ் அப் - டெலிகிராம் பதிவிறக்கம் ;


மொபைலில் ஒரு சிம் கார்டு பயன்படுத்தி வாட்ஸ் ஆப் செயலியை ஒருமுறை தரவிறக்கம் செய்து விட்டால் போதும். அந்த சிம்கார்டை மொபைலில் இருந்து அகற்றி விட்டு வாட்ஸ் ஆப் , டெலிகிராம் ஆப்பை மட்டும் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆக்டிவ் ஆக இல்லாத மொபைல் எண்ணை கொண்ட சிம்கார்டு மூலம் வாட்ஸ் ஆப் செயலியை ரிமோட் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து கூடக் இயக்க முடியும்.


வாட்ஸ் அப் , டெலிகிராம் புதிய கட்டுப்பாடு


வாட்ஸாப் , டெலிகிராம், அரட்டை உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த செயலிகளைப் பயன்படுத்தும் போது மொபைல் போனில் சிம் கார்டு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், சிம் கார்டு இல்லாமலோ அல்லது செயல் இழந்த சிம் கார்டை வைத்தோ இந்தச் செயலிகளை பயன்படுத்த முடியாது என்றும் தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிம் கார்டு இல்லாமல் பயன்பாடுகள்


இந்த செயலிகள், பயனரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு அவர்களது தொலைபேசி எண்னை பயன்படுத்துகின்றன. இதன் பின் சிம் கார்டு இல்லாமலேயே, செயலிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. இந்நிலையில், இதை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து சைபர் மோசடிகள் நடப்பதாகவும், இதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய விதிமுறைகள் உடனடியாக அமல்


மொபைல் போனில் செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் கணினியில் இணையதளம் வாயிலாக இந்த செயலிகளை பயன்படுத்தினால், பாதுகாப்பு கருதி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானாகவே லாக் அவுட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் பயன்படுத்த, கியு ஆர் குறியீடு வாயிலாக இணைத்துக் கொள்ளும் வசதியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இவற்றை நடைமுறைப்படுத்த, நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.