Just In





”பதவிக்காக நான் யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை” எடப்பாடியை சொன்னாரா ஜெயக்குமார்..?
பதவிக்காக தான் யார் வீட்டு வாசலிலும் போய் நிற்கவில்லையென ஜெயக்குமார் பேசியுள்ளதும். எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இன்றி அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்தும் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது

பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைத்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்கலாம் என்று கூட்டணி அறிவித்த அன்று காத்திருந்த செய்தியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அன்று அவர் எடப்பாடியோடு அமித் ஷாவை சந்திக்க வரவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், எடப்பாடி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து வந்தது முதல் அவரை ஜெயக்குமார் சென்று பார்க்கவோ, அதிமுக தொடர்பான நிகழ்ச்சிகளிலோ பங்கேற்கவில்லை. இந்த விவகாரம் பூதாகரமானது. ஜெயக்குமார் அதிருப்தியில் இருக்கிறார் என்று கூறப்பட்டது.
ஏனென்றால், ராயபுரம் தொகுதியில் முடிசூடா மன்னானாக இருந்த தான் தேர்தலில் தோற்றதற்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததே ஒரே காரணம் என்று போட்டுத் தாக்கியிருந்தார் அவர். இந்நிலையில், பரபரப்பான சூழலுக்கு இடையே இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயக்குமார்.
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு , அவரது பிறந்த நாளையொட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக , அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொன்னையன் , முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , மகளிர் அணிச் செயலாளர் பா. வளர்மதி , செய்தி தொடர்பாளர் கோகில இந்திரா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன், அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது ;
தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அதே நேரம் மலையாள சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2006 , 2011 ஆம் காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவதற்கான ஆணையை பிறப்பித்து வரலாற்றை மாற்றியவர் கருணாநிதி என விமர்சனம் செய்தார்.
2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்தில் கொண்டாட வேண்டும் என அரசாணை பிறப்பித்தார். அப்போது நான் சபாநாயகராக இருந்தேன் அப்போதிலிருந்து சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதிமுக பாஜக கூட்டணி வைத்தால் அதிமுக ஜெயக்குமார் கட்சியில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகிறது என செய்தியாளர் கேள்விக்கு
அதிமுக - பாஜக கூட்டணி வைத்தால் கட்சியிலிருந்து விலகுவதாக நான் எப்போதும் தெரிவித்தது இல்லை.
பதவிக்காக எந்த வீட்டு கதவையும் தட்டியதில்லை
சுதந்திர போராட்டத்திற்காக தனது தந்தை உழைத்தார். அப்போது இருந்து கட்சி பதவிகளுக்காக எப்போதும் எனது தந்தை நான் என்னை சுற்றி அவர்கள் யாரும் கட்சிப் பதவிக்காக யார் வீட்டு கதவையும் தட்டியது இல்லை என சுட்டிக் காட்டினார். குறிப்பாக ஜெயக்குமார் பதவிக்காக எந்த வீட்டு தட்டி நின்றது இல்லை எனது உயிர் மூச்சு இருக்கும் வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது , அதே வேலையில் இந்தியாவிற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அனைத்து பட்ட மக்களுக்காகவும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் அண்ணல் அம்பேத்கர் என புகழாரம் சூட்டினார். மேலும் அதனைத் தொடர்ந்து தமிழ் புத்தாண்டு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் என இரண்டு மகிழ்ச்சியான நாள் இருப்பது மகிழ்ச்சி.
அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி தற்போது கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு அதிமுக சார்பில் அதிமுக தலைமைச் செயலாளர்கள் மாலை அணிவித்து மலர் தூவியம் மரியாதை செலுத்தினோம் என தெரிவித்தார்.
கூட்டணி முடிவுகு பின்னர் எடப்பாடியை சந்திக்காத ஜெயக்குமார்
பாஜகவுடன் கூட்டணி வைத்தது சரி என்றோ, அது கட்சியின் முடிவு என்றோ எதையும் சொல்லாத ஜெயக்குமார், இன்றைய தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தான் கட்சி மாறிப்போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு மட்டுமே தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பதவிக்காக தான் யார் வீட்டு வாசலிலும் நின்றதில்லை என்று கூறியுள்ள நிலையில், அவர் எடப்பாடி பழனிசாமியை சொன்னாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதோடு, அவர் வெளியிட்டுள்ள தமிழ்புத்தாண்டு வாழ்த்து வீடியோவில் எடப்பாடி பழனிசாமி இல்லாத ஒ.பன்னீர்செல்வம் இருக்கும் பழைய வீடியோவை பகிர்ந்துள்ளதும் பேசுபொருளாகியிருக்கிறது.