தமிழ்நாட்டில் பட்டாக்கத்தி கலாசாரம் தலைதூக்க தொடங்கியுள்ளது. பொது இடங்களில் இளைஞர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் வலம்வருவது, ரகளை செய்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறுவதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.


நேற்றுகூட வேலூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம்சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன், கிஷோர், பாலாஜி ஆகிய 3 பேர்  மிரட்டி அவர்களிடம் இருந்த 1500 பணம், 1 செல்போனை வழிபறி செய்துக்கொண்டு பட்டா கத்தியுடன் கலாட்டா செய்துள்ளனர். 


இதனை அவ்வழியாக சென்ற எஸ்.பி செல்வகுமார் பார்த்து உடனே அவர்களை துரத்தி மூவரில் இரண்டு பேரை துப்பாக்கி முனையில் பிடித்து கைது செய்தார். தப்பியோடிய ஒருவரை காவல்  துறையினர் தேடிவருகின்றனர்.




அதேபோல், செங்கல்பட்டு அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு கும்பலாக நின்ற இளைஞர்கள் போலீஸை கண்டதும் ஓடினர். அவர்களை துரத்தி பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் பட்டாக்கத்தி இருந்தது தெரியவந்தது.


இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,  திமுகவினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும்போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல்திமுக ஆட்சிக்கு வந்தாலே அமைதி பூங்கா பட்டம் பறிபோகிறது.


 






போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன,அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது மற்றும் ஒரு எடுத்துக்காட்டு. 


 






காவல் துறையினருக்கு அம்மாவின் அரசு அளித்ததுபோல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை விடியா அரசு நிலைநாட்ட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண