உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்டா நிறுவனம் தங்களது பயனர்களுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு புதிய வசதிகளை அவ்வப்பொழுது வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு 100 போட்டோகள் / வீடியோக்கள் வரை அனுப்பும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இதுவரை 30 போட்டோக்கள் / வீடியோக்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையில் புதிய அப்டேட் பயனர்களுக்கு பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது.
WaBetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்ட்ராய்ட் வர்ஷன் பீட்டா அப்டேட்டின் படி, இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. போட்டோ ஆல்பங்களை அனுப்ப இந்தப் புதிய வசதி உதவுகிறது. மேலும் இந்த புதிய வசதியின் மூலம், அதிகமான போட்டோக்களை தேர்வு செய்யும்போது ஒரே போட்டோவை மீண்டும் செலக்ட் செய்யாமல் இருக்கும் வகையில் இந்த அப்டேட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் மெசேஜ் அப்டேட் :
2.22.21.5 பீட்டா அப்டேட்டின் படி, வாய்ஸ் மெசேஜ்களை வாட்ஸ் அப் ஸ்டேடஸ் ஆக வைக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதற்கான பணிகளில் வாட்ஸ் அப் தொழில்நுட்ப குழுவினர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வாய்ஸ் மெசேஜ் சேவையில் கூடுதல் வசதியை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்டு செய்யும்போது, விண்டோவை விட்டு வெளியே வந்தால், அதை ஆட்டோமேட்டிக்காக சேமித்து வைப்பது, ஸ்டேடஸில் ப்ளே/ பாஸ் வசதியை கொண்டு வருது உள்ளிட்டவைகளையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் மெசேஜ்களை வாட்ஸ் அப் ஸ்டேடஸ் ஆக வைக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதற்கான பணிகளில் வாட்ஸ் அப் தொழில்நுட்ப குழுவினர் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
”New Fonts” வசதி:
புதிய எழுத்துருக்களை (Fonts) சேர்க்கவும் வாட்ஸ்-அப் செயலி டெவலப்பர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFs-களை எடிட் செய்வதன் மூலம், புதிய எழுத்துருக்களை சேர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது. புதிய அப்டேட் மூலம் Calistoga, Courier Prime, Damion, Exo 2 மற்றும் Morning Breeze ஆகிய புதிய எழுத்துருக்கள் வாட்ஸ்-அப் செயலியில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்மின்களுக்கான புதிய அம்சம்:
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சமீபத்திய பீட்டா அப்டேட்டில், வாட்ஸ்அப் குழுவின் நோக்கம் (SUBJECT) மற்றும் விளக்கங்களுக்கான(DESCRIPTION) எழுத்து வரம்பை அதிகரித்துள்ளது. முன்பு வாட்ஸ்-அப் குரூப்பின் சப்ஜெக்டை எழுதுவதற்கான வரம்பு 25 எழுத்துகளாக இருந்தது. ஆனால் விரைவில், பயனர்கள் 100 வார்த்தைகள் வரை எழுத முடியும். கூடுதலாக, விளக்கங்களுக்கான எழுத்துகளின் வரம்பு 512-லிருந்து 2048 வரை அதிகரிக்கும். இது குழுவின் தலைப்பு மற்றும் நோக்கத்தை, உறுப்பினர்களிடையே அட்மின் முறையாகவும், முழுமையாகவும் விளக்குவதை எளிதாக்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைக்கிறது. விரைவில் அனைத்து பயனாளர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்: