காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்டு 14 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தகாவல் நிலையங்களில் திருட்டு,விபத்து, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி உரிமை கோரப்படாத ஏராளமான வாகனங்கள் காவல் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து வாகனங்களை ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டும், வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை, மேலும் வாகனங்களை யாரும் உரிமையும் கோரவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விட்டு அதன் மூலம் வரும் விற்பனை தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த காவல்துறை இயக்குனர் கேட்டுக் கொண்டு உள்ளார்.




அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 காவல் நிலையங்களிலும் எவரும் உரிமை கோராத நிலையில் உள்ள 1817 இருசக்கர வாகனங்கள், 15 முன்று சக்கர வாகனங்கள்,26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1858 வாகனங்கள், காஞ்சிபுரம் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளி ஆயுதப் படை பயிற்சி மைதானத்திற்கு கொண்டு வந்து காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால்  உரிய ஆவணங்களை கொண்டுவந்து காண்பித்து வாகனங்களை எடுத்துச் செல்லவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





இந்நிலையில் உரிமை கோரப்படாத 1858 வாகனங்களும் இன்று காலை 10 மணி முதல் காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், ஆகியோரால் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் மூலம் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், வாகனத்தை ஏலம் எடுப்பவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன், இருசக்கர வாகனத்திற்கு 12% சதவீதமும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% சதவீதமும் விற்பனை வரியை செலுத்திவிட வேண்டும் என்றும்,ஏலத்தில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் தவறாது தங்களது அசல் ஆதார் கார்டு மற்றும் நகலை கொண்டுவர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.




இந்த ஏலத்தில் பங்கேற்க வந்த பொதுமக்கள் கூட்டம் அலை மோதியதால் காவல்துறையினர் பொதுமக்கள் மத்தியில் வாகனத்தை ஏலம் விடப்பட்டு பொதுமக்கள் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக காவல் நிலையங்களில் யாரும் உரிமை கோரப்படாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,858 வாகனங்களுக்கு நாளை மறுநாள் முடிவு ஏற்பட்டு அரசுக்கு வருமானம் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண