சொந்த வீடு - காலி மனை 

Continues below advertisement

இன்றைய சூழலில், எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் மக்கள், பல்வேறு விஷயங்களை கவனிக்க தவறுகின்றனர். இதனால் , வீடு வாங்கிய சில மாதங்கள் , ஆண்டுகளில் பல்வேறு சில பிரச்னைகளுக்காக நீதிமன்றங்களை நாடுகின்றனர். வீடு , மனை வாங்குவ தில் ஏற்படும் பிரச்னைகளில் சில இடங்களில் மக்களும், சில இடங்களில் கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புள்ளது.

கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவதில் , மக்களும் , நிறுவனங்களும் பாதிக்கப்படக் கூடாது. இதற்காக , ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டத்தை மத்திய அரசு , 2016 - ல் நிறைவேற்றியது. இதை அமல்படுத்தும் வகையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவை அமைக்கப்பட்டன. இந்நிலையில் வீடு , மனை வாங்குவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து மத்திய அரசு விழிப்புணர்வு வெளிப்படுத்தி வருகிறது.

Continues below advertisement

என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் ;

1. புதிதாக, வீடு, மனை வாங்கும் போது அது ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.

2. இது தொடர்பான விபரங்களின் உண்மை தன்மையை ரியல் எஸ்டேட் ஆணைய இணைய தளம் வாயிலாக உறுதிப்படுத்துவதில் அலட்சியம் காட்ட கூடாது.

3. வீடு, மனை விற்பனை குறித்த தகவல்கள் எந்த வழியில் கிடைத்தாலும் அதன் உண்மை தன்மையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்.

4. சொத்து வாங்கும் முன், அதற்கான தொகையை செலுத்துவதற்காக கால வரம்பு தொடர்பான விபரங்களை கேட்டு அறிய வேண்டும்.

5. எந்த திட்டமானாலும் , அதில் சொத்து வாங்குவோர் , எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இன்றி பணம் கொடுக்காதீர்கள் , அப்போதும் 10 சதவீதத்துக்கு மேற்பட்ட தொகையை ஒப்பந்த நிலையில் கொடுக்க கூடாது.

6. இதற்காக கட்டுமான நிறுவனங்கள் தயாரித்து கொடுக்கும் ஒப்பந்த ஆவணங்களை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். அதில் நிறுவனம் தெரிவிக்கும் நிபந்தனைகள் ஏற்புடையதா என்று பார்க்க வேண்டும்.

7. இது போன்ற ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமாக இருப்பதாக தெரிந்தால் அதை நீக்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தலாம்.

8. நீங்கள் , வாங்க நினைக்கும் சொத்து குறித்து விசாரிக்கும் போது அங்கு ஏற்படுத்தப்பட உள்ள அடிப்படை வசதிகள் குறித்த விபரங்களை முழுமையாக அறிய வேண்டியது அவசியம் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.