சென்னை, மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை புரிகின்றனர். சர்வதேச விமான நிலையமான சென்னை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் ஏராளமான பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் துர்காபூர் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் சேகர் ஹஸ்ரா என்ற பயணி பயணம் செய்தார். அவருக்கு வயது 69. சென்னை வந்த சேகர் ஹஸ்ரா உள்நாட்டு விமானங்களில் வரும் பயணிகளுக்கான பாதையான கேட் நம்பர் 2 வழியாக வெளியேறும் போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்தபோது அவருக்கு மாரடைப்பு  ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.






இதையடுத்து, அவரை அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் இருவரும் உடனே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சேகர் ஹஸ்ராவை அருகே இருந்த ஸ்ட்ரச்சர் மீது படுக்க வைத்தனர். பின்னர், அவரது உயிரை காப்பாற்றுவதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் சேகர் ஹஸ்ராவின் மார்பில் தனது இரு கைகளையும் வைத்து அழுத்தி முதலுதவி செய்தார்.






பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மாரடைப்பால் மயங்கி விழுந்த சேகர் ஹஸ்ராவிற்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதன் காரணமாகவே மயங்கி விழுந்தார் என்றும் தெரியவந்துள்ளது. கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மயங்கி விழுந்த விமான பயணிக்கு, விரைந்து சென்று முதலுதவி செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு அங்கிருந்த சக பயணிகளும், உயர் அதிகாரிகளும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த சம்பவத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க : Kanchipuram Saree : 427 பெருமாள் முகங்கள்.. காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு செல்கிறது காஞ்சி பட்டு.. சுவாரஸ்ய பின்னணி..


மேலும் படிக்க : Flipkart : லேப்டாப்புக்கு பதில் சோப்பு..! ஷூவுக்கு பதில் செருப்பு..! வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட் தந்த அதிர்ச்சி..