இந்தியாவில் உணவுகளை வீட்டிற்கே கொண்டு வந்து டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஸ்விகி மிகவும் பிரபலமானது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் என்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய நகரங்களில் ஸ்விகி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையிலும் ஸ்விகி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணிகளில் ஆயிரக்கணக்கானோர் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பணியாற்றி வருகின்றனர்.




இந்த நிலையில், கவுசிக் மாதவன் என்பவர் தன்னுடைய லிங்க்ட் இன் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் மேலே அவர், “ நான் இன்று எனது குடியிருப்பின் முன்பு ஸ்விக்கி ஊழியர் ஒருவர் தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் வாடிக்கையாளருக்காக உணவையும் ஆர்டர் எடுத்துக்கொண்டு, பள்ளியில் இருந்து தனது மகன் மற்றும் மகளையும் அழைத்து வந்துள்ளார். அவரும், அவரது குழந்தைகளும் வாடிக்கையாளர் வந்து தங்களது உணவைப் பெற்றுக்கொள்ளும் வரை மிகவும் பொறுமையாக காத்திருந்தனர்.  


நாம் அனைவரும் வாழ்க்கையையும், வேலையையும் எவ்வாறு சமன்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறி வருகிறோம். ஆனால், வேலையையும், வாழ்க்கையையும் எவ்வாறு சமமாக பாவிக்க வேண்டும் என்பதற்கு இதுவே உதாரணம். ஸ்விகி உங்களுக்கு அற்புதமான பணியாளர் கிடைத்துள்ளார். அவரை அங்கீகரிக்க வேண்டும். அவரை ஊக்கிவிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.




அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் ஸ்விக்கி ஊழியர் உணவைப் பெற்றுக்கொள்வதற்காக வாடிக்கையாளர் வரும் வரை தனது மகன் மற்றும் மகள் இருவருடன் காத்திருக்கிறார். அந்த சிறுவர்களும் தங்களது தந்தையுடன் காத்திருக்கின்றனர்.


அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தின்கீழ் ஸ்விக்கி ஊழியரை பாராட்டி பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்கு ஸ்விக்கி நிறுவனம் பாராட்டுடன் ஊதிய உயர்வும் அளிக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும், சிலர் இந்த சிறுவயதில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிக்காமல் தந்தையுடன் காத்திருந்த அந்த சிறுவனுக்கும், சிறுமிக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண