விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

 

இளைஞர்களின் விழா

 

காஞ்சிபுரம் : இளைஞர்களால் கொண்டாடப்படும் , விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா இருந்து வருகிறது. பிற கோவில் திருவிழாக்களை ஊர் பெரியவர்கள் முன்னின்று நடத்தும் பொழுது, விநாயகர் சதுர்த்தி விழாவை இளைஞர்கள் முன்னின்று நடத்துவதால், விநாயகர் சதுர்த்தி விழா தனிக்கவனம் பெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, இரண்டு ஆண்டுகள் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் மீண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் பொழுது விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும், வழக்கம்போல் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 


சிலை தயாரிக்கும் பணி - Vinayagar Chaturthi 2023


சிலைகளை தயாரிக்கும் பணி

 

இதனால் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை செய்து விற்பனைக்காக தயாராக உள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள திருத்தேரி பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், மண்பாண்ட அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை கூடம் உள்ளது. இதில் புதிதாக விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திரா மாநிலம், புதுவை, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ் வாட்டர் கலர் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொள்முதல் செய்து திருத்தேரி பகுதியில் இரண்டு இடங்களில் கூடங்கள் அமைத்து சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


சிலை தயாரிக்கும் பணி - Vinayagar Chaturthi 2023


 


சிலை தயாரிக்கும் பணி - Vinayagar Chaturthi 2023


இங்கு ஒரு அடி முதல் 10 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது. இந்த சிலை ரூ.100 முதல் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சிலைகள் வடிவமைத்து உள்ளனர். இதனை வாங்குவதற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.

 



 

இதுகுறித்து சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாவது : இந்தாண்டு விநாயகர் சிலைகளை வெளி மாநிலங்களில் இருந்து வரவழைப்பதற்கு பதிலாக நாங்கள் புதிதாக தயாரிக்கும் விநாயகர் சிலையானது, எளிதில் கரைய கூடிய வகையில் பேப்பர்கூழ், ஜவ்வரிசி, கிழங்குமாவு, களிமண் போன்றவற்றால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

 


சிலை தயாரிக்கும் பணி - Vinayagar Chaturthi 2023


தற்போது எங்களிடம் மூன்று முக விநாயகர், பாகுபலி விநாயகர், விவசாய விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயன விநாயகர், நந்திகேஷ்வரா விநாயகர், கற்பக விநாயகர் திருப்பதி விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், சிங்கவாகன விநாயகர், எலி, நந்தி உள்ளிட் பல வடிவங்களில் அதாவது 30-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம். மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக விநாயகர் சிலை சற்று உயர்ந்துள்ளது என தெரிவித்தனர்.

 


சிலை தயாரிக்கும் பணி - Vinayagar Chaturthi 2023


சிலை வாங்குபவர்கள் கூறுகையில், "கடந்த ஆண்டை விட, வித்தியாசமான விநாயகர்கள் விற்பனைக்காக வந்துள்ளது. விலை சற்று கூடுதலாக இருந்தாலும், விநாயகர் வாங்க வந்துள்ளோம்”  எனத் தெரிவித்தனர்.