சென்னையை சேர்ந்த முகமது ஜூனைல் என்பவர் சேலம் தலைவாசல் பகுதியில் வெள்ளரி ஊறுகாய் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். சேலத்தில் நடத்திவரும் ஊறுகாய் நிறுவனத்திற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மேல்மலையனூர் மரக்காணம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வெள்ளரிப் பிஞ்சுகளை விலைக்கு வாங்கிச் செல்வது வழக்கம் இந்த நிலையில் வெள்ளரிப் பழம் வாங்கிச் சென்ற விவசாயிகளிடம் அதற்கான தொகையை ஒப்படைப்பதற்காக தென்குமரி தலைவாசல் பகுதியைச் சேர்ந்த சிபி சக்கரவர்த்தி மற்றும் ஊறுகாய் கம்பெனி நிறுவனத்தில் மேலாளர் ராஜா மற்றும் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் தலைவாசலில் இருந்து மரக்காணத்திற்கு ரூபாய் 30 லட்சம் பணத்தை காரில் எடுத்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த எட்டு பேர் கொண்ட வழிப்பறி கும்பல் இவர்களின் காரை நீண்ட தூரம் பின்தொடர்ந்து வந்துள்ளனர். பின் தொடர்ந்து வந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் உள்ள பெருமுக்கல் ஏரிக்கரை அருகே நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி திருடர்கள் காரை சுற்றிவளைத்து மடக்கினர்.
காரை எடுக்க முடியாமல் தவித்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கழுத்தில் கத்தியை வைத்தனர். டிரைவருக்கு அருகில் இருந்த சிபி சக்கரவர்த்தி என்பவர் கழுத்திலும் கத்தி வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊறுகாய் கம்பெனி மேலாளர் கையில் வைத்திருந்த 30 லட்சம் ரூபாயை மறைத்தார். இதைக்கண்ட மற்றொரு நபர் ராஜாவின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு ரூபாய் 30 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிக்கொண்டு கார் சாவியையும் எடுத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா பெருமுக்கல் அருகே இருக்கக்கூடிய பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவலின் அடிப்படையில் பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் சீனிபாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
Rajya Sabha election: ராஜ்யசபாவுக்கு செல்லும் இருவர்! திமுக கொடுத்த TWIST |
மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சிபிசக்கரவர்த்தி மற்றும் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தில் கத்தி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்கள் இன் அடையாளங்களை மாவட்ட கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர் இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சுங்கச் சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க உத்தரவிட்டார்.
மேலும் விசாரணையில் இவர்களின் காரை சேலத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்ததாக தெரிகிறது என்றார். மேலும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வழிப்பறிக் கொள்ளையர்களின் இரு சக்கர வாகனம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது இதனை கைப்பற்றி தற்பொழுது தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டிவனம் அருகே காரில் சென்றவர்கள் இடம் 30 லட்சம் ரூபாயை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Anna Birthday: அண்ணாவிற்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!