கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( kilambakkam bus terminus )
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்தை நெரிசலை சரிசெய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 393.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை வசதிகள்
மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் பேருந்து நிலையம் அமைவதற்காக அனைத்துவித அடிப்படை வசதிகளையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கழிவறை வசதி, பயணிகள் ,ஓட்டுனர்கள் நடத்தினார்கள் தங்கும் இடங்கள், உணவு, மருத்துவம், மருந்து விற்பனை கடைகள் உள்ளிட்டவற்றுடன் இயங்கக் கூடிய வகையில் ஏற்படுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று புறநகர் காவல் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இணைப்பு பேருந்துகள்
சென்னை புறநகர் மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வெளிவரும் பேருந்துகளை இயக்கும் பட்டியலை அரசு போக்குவரத்துக் கழகம் தயார் செய்து வருகின்றன.
1700 சர்வீஸ் பேருந்து
சென்னை மாநகர பகுதிகளை இணைக்கும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் வழித்தட பட்டியலை இறுதி செய்துள்ளது. இதற்காக பணிமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னையில் இருக்கும் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலான பகுதிகளுக்கு நேரடி பேருந்துகளையும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எந்த எந்த பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது ?
அந்த வகையில் கோவளம் ,பிராட்வே ,எண்ணூர் ,திருவொற்றியூர் ,பூந்தமல்லி ,கோயம்பேடு ,செங்குன்றம் ,அடையாறு, வேளச்சேரி ,திருவான்மியூர் ,மகாபலிபுரம், மெரினா கடற்கரை , ஆவடி, உயர்நீதிமன்றம் ,சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 300 பேருந்துகளை வைத்து 1700 சர்வீஸ் பேருந்துகளை ஏற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோக ஏற்கனவே தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் பேருந்துகளும், அதேபோன்று சென்னை மாநகரில் பல்வேறு பகுதியில் இருந்து கூடுவாஞ்சேரி வரை செல்லக்கூடிய பேருந்துகளும் 200க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றது அவற்றையும், இணைத்து ஏற்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
யாருக்கு பயன் தரும்
முக்கியமாக இந்த பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் பொழுது, மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து நெரிசில் இருந்து சற்று ஆறுதலை கொடுக்கும். இதன் மூலம் நேரடியாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்ள முடியும். அதேபோன்று வடமாவட்டங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த பேருந்து நிலையம், உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.