பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து ரிசைக்கிள் செய்வதில் தமிழ்நாடு ஒரு நிலைப்பாட்டை எடுத்த போதிலும், அதற்கு மெரினா கடற்கரை நீண்டகால விதிவிலக்காக உள்ளது. கடற்கரையில் உணவுக் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அதன் பிறகு கடற்கரையில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக்குகள் அதற்கு சான்று. இருப்பினும், விற்பனையாளர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு மாறியதால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்திருப்பதாகத் தெரிகிறது.கடந்த ஆறு மாதங்களாக, பெருநகர சென்னை மாநகராட்சி, விற்பனையாளர்கள் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த கப் மற்றும் ப்ளேட்களுக்கு மாற வேண்டும் என்று தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. . இதன் விளைவாக, விற்பனையாளர்கள் கண்ணாடி தட்டுகள் அல்லது டம்ளர்களை வாங்கியுள்ளனர். இதுதவிர  இப்போது பனை ஓலை கிண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர்.


விளிம்புநிலை மக்களை பாதிக்கிறது...


50 பனை ஓலைத் தகடுகள் கொண்ட ஒரு பேக் விற்பனையாளர்களுக்கு ₹600 முதல் ₹750 வரை செலவாகும், மேலும் ஒவ்வொரு தட்டு உணவையும் ₹20 அல்லது ₹25க்கு விற்றாலும், அவர்களின் லாபம் மிகச் சிறியதாகவே இருக்கிறது. கண்ணாடித் தட்டுகள் அல்லது கண்ணாடிகளில் உணவு பரிமாறும்  விற்பனையாளர்கள், ஒவ்வொரு உபயோகத்துக்குப் பிறகும் பாத்திரத்தை சுத்தம் செய்ய சோப்பு மற்றும் அதற்கான பிரஷ்ஷுடன் இரண்டு வாளி தண்ணீரை வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரு தட்டின் தூய்மை முற்றிலும் உத்தரவாதம் அளிக்கப்படாதது என்பதால் பனை ஓலை கிண்ணங்களே பெரும்பாலானோரால் விரும்பப்படுகின்றன.




பானி பூரி மற்றும் சாட் விற்கும் மக்கள் கூறுகையில், "நாங்கள் சிறிது காலத்திற்கு முன்பு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம், ஒவ்வொரு நாளும் மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டால்களை ஆய்வு செய்ய வருகிறார்கள்." என்றார்.


மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியின் கூற்றுப்படி, 16 பேர் கொண்ட கடற்கரைக் குழு மாலை நேரங்களில் கடற்கரையை ஆய்வு செய்து, விதியை மீறும் பட்சத்தில் பொதுமக்கள் அல்லது விற்பனையாளர்களிடம் அபராதம் வசூலிக்கிறது. குப்பை கொட்டுவதைத் தடுக்க மட்டுமே ₹100 அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.  நவம்பர் 19 மற்றும் 22 க்கு இடையில் மட்டுமே இந்தக் குழு ₹2,100 வசூலித்தது. காலையில், அருகிலுள்ள குப்பை சேகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படும் கழிவுகளை சேகரிக்க மணல் சுத்தம் செய்யும் டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. "எங்கள் நோக்கம் கடற்கரையை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவது மற்றும் இதுதொடர்பாக மக்களைத் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வது இருப்போம்" என்று ஆணையர் ககந்தீப் சிங் கூறினார்.


கடற்கரையில் சென்று பார்த்த வரையில் இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. மேலும் இது குப்பைக்கூளமற்ற தூய்மையான மெரினா உருவாக்க வழிவகை செய்கிறது.நமது கவலையெல்லாம் இதற்காக பொதுமக்களால் தமது அன்றாட சொற்ப வருமானத்தில் போதிய பணத்தை செலவழிக்க முடியுமா என்பதுதான்...