சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவனுக்கு ராக்கிங் கொடுமை என புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வடபழனி சரக உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


சக மாணவர்கள் பாலியல் ரீதியாகவும் நிர்வாணப்படுத்தியும் ராக்கிங் செய்ததாக அந்த மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அந்த மாணவனுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் தகவலின்படி கே.கே நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றனர். 


அதன்படி  வடபழனி சரக உதவி ஆணையர் பாலமுருகன் மற்றும் காவல் துறையினர் கடந்த ஒரு மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.