கட்சியோட பேரோ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழகத்திற்கே வாழ்வதற்கு உரிமை வாங்கி தருவாராம், ஆனால் அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டு 20 வருடத்திற்கு மேல் வாழ்ந்த எனக்கு வாழ்வதற்கு உரிய நிவாரணமோ நியாயமோ வழங்கவில்லை, ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏ என்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்றும் எம்எல்ஏவுமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி காஞ்சிபுரத்தில் பேட்டி.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏவுமான, பண்ருட்டி வேல்முருகன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் வேல்முருகனின் மனைவி காயத்ரி ஆகியோர் குடும்ப விவாகரத்து வழக்கு காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம் என் இரண்டில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கு விசாரணை வேறு ஒரு நாளுக்கு மாற்றி வாய்தா வழங்கி நீதிபதி கொடுத்த விட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் எம் எல் ஏ வின் முன்னாள் மனைவி காயத்ரி, கட்சியோட பேரோ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகத்திற்கே வாழ்வதற்கு உரிமை வாங்கி தருவாராம் ஆனால் அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டு 20 வருடத்திற்கு மேல் வாழ்ந்த எனக்கு வாழ்வதற்கு உரிய நிவாரணமோ நியாயமோ எனக்கு வழங்கவில்லை, எல்லோருக்கும் பேசுகிறார், இவர் கிட்ட இருந்து எனக்கு விடுதலையும் பாதுகாப்பும் இருந்தால் நன்றாக இருக்கும்,
எனக்கு கோர்ட் ஆர்டர் போட்டும் மாதம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார்கள்,அது கேஸ் நடந்து கொண்டிருக்கிறது அதற்காக தான் நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறோம். 2018 விவாகரத்து வழக்கு தீர்ப்பாகியது அது சம்பந்தமாகவும் ஆஜராக இல்லை. வளசரவாக்கத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கிறது அதையும் அவர் ஆக்கிரமிப்பு பண்ணிக்கொண்டு இருக்கிறார். அவர் ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏ என்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் வருமான ரீதியாக நிரம்ப கஷ்டப்படுகிறேன். இந்த வீட்டில் அவர்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அந்த வீடு என்னுடைய பெயரில் முழுக்க முழுக்க இருக்கிறது ஆனால் அவர்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,அந்த தெரு பக்கமோ, வளசரவாக்கம் ஏரியா பக்கமோ என்னால் போக முடியவில்லை.
ஆனால் அது என் பெயரில் எனது அப்பா வாங்கி கொடுத்த வீடு, ரொம்ப தொல்லைகள் கொடுத்துக் கொண்டு பிரச்சனைகள் பண்ணிக்கொண்டு இருக்கிறார். எனக்கு பாதுகாப்பு, தொல்லைகள் கொடுக்காமலும்,கோர்ட் உத்தரவு போட்டு இருக்கின்றபடி நிவாரண தொகையையும்,என்னுடைய வளசரவாக்கம் வீட்டையும் அவரிடம் நான் கேட்கிறேன். இவர் வந்து மக்களுக்கு நியாயம் நீதி தமிழகத்திற்கு வாழ உரிமை கொடுப்பாராம். அதனால்தான் அந்த கட்சி பெயர் தமிழக வாழ்வுரிமை கட்சியும் மனைவியாக கட்டிக்கிட்ட எனக்கு வாழ உரிமை கொடுக்கச் சொல்லுங்கள், என வேல்முருகன் முன்னாள் மனைவி காயத்ரி செய்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்