Chennai Traffic Diversion: சென்னையின் முக்கிய பகுதியில் இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


போக்குவரத்து மாற்றம்


சென்னை நகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் அமைத்தல், சாலையை விரிவுப்படுத்தல், மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது, போக்குவரத்து போலீசார் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 


பெருநகர மாநகராட்சி தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணா சாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு வரை இணைப்பு மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தெற்கு உஸ்மான் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 07-07-2023 (இன்று) முதல் 13.07.2023 போக்குவரத்து மாற்றம் ஒரு வாரம் சோதனை ஓட்டம் செய்யப்படுகின்றது.


1. அண்ணாசாலையிலிருந்து வரும் MTC பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தி.நகர் மேட்லி சந்திப்பு செல்வதற்கு கண்ணம்மாபேட்டை சந்திப்பில் இடது புறமாக திரும்பி புதியபோக் சாலை சென்று முத்தூங்கள் சாலை வழியாக வலது புறமாக திரும்பி முத்தூங்கள் சாலை மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி தி.நகர் பேருந்து நிலையம் உல்மான் சாலையை அடையலாம்.


2. போத்தீஸ் மேம்பாலத்திலிருந்து உஸ்மான் சாலை வரும் MTC பேருந்துகள் (47474) சைதாபேட்டை செல்லும் பேருந்துகள் இடது புறம் சென்று பர்கிட் ரோடு வழியாகவும் மற்றும் தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து Out bite வழியாக வரும் MTC பேருந்துகள் அண்ணாசாலை செல்வதற்கு மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி பாகிப் ரோடு வழியாக முப்பாரப்பன் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சி.ஐ.டி நகர் ரவுண்டான அடைந்து இணைப்பு சாலை வழிவாகவும் அல்லவது மெயின் ரோடு வழியாகவும் அண்ணா சாலையை டையலாம்.


3. மேட்லி சந்திப்பில் இருந்து மூப்பாரப்பம் சாலை வரை பர்கிட் ரோடு ஒருவழி சாலையாக மாற்றப்படுகிறது. 


4. போந்தீல் மேம்பாலத்திலிருந்து உஸ்மான் சாகைக்கும் இலகுரக கனங்கள் மேட்சி சந்திப்பில்  வலது புறமாக திரும்பி மேட்லி சுரங்கப்பாதை வழியாக மேற்கு மாம்பலம் மற்றும் மேற்கு சைதாப்பேட்டை அடையலாம்.


5. JYM சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் தண்டபாணி தெருவில் இடதுபுறம் திரும்பி மூப்பாரப்பன் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி நகர் அடையலாம்.


6. வெங்கடநாராயண சாலையில் இருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் பர்கிட ரோடு மூப்பாரப்பன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி Moosa Street வழியாக தி.நகர் அடையலாம்” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.