விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணையை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது சாதி பெயர்களை பயன்படுத்தக் கூடாது அவற்றை அறவே நிக்க வேண்டும் என்ற அரசாணை வெளியிட்டது. அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்று பாராட்டுகிறது.
முதலமைச்சரை சந்தித்து அந்த அரசாணை வெளியிட்டதற்கு முறைப்படி நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பதற்காக விசிக சார்பில் இன்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
இன்னும் சில சாதிகளின் பெயர்கள் புழக்கத்தில் உள்ளது. அதனை அகற்றி இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறது என்றாலும் கூட அதனை சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்துள்ளோம்.
நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வேலைக்காக பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். நீண்ட காலமாக அவர்கள் காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வைத்த கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு விசிக சார்பில் வைத்துள்ளோம். பள்ளிக்கல்வித்துறை நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அதேபோல, ஒருங்கிணைந்த பட்டதாரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து வேலை பெறாமல் ஏறத்தாழ 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். 14 ஆண்டுகளாக அவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.
கலைஞர் ஆட்சி காலத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு முடிந்துள்ளது. அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க பணி நியமனம் செய்ய ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் குப்பை மேடு - மாற்று திட்டம்
வடசென்னை பகுதியில் குப்பை கொட்டி எரிக்கின்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அந்த குப்பைகளை எரிப்பதினால் வடசென்னையில் காற்று மற்றும் குடிநீர் போன்ற வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே அதனை பராமரிப்பதற்கு மாற்று திட்டம் ஒன்றை அவர்கள் தயாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். அதனை முதலமைச்சர் பார்வைக்கு விசிக சார்பில் கொண்டு சென்று உள்ளோம்.
வடசென்னைக்கு ஏராளமான பணிகளை கொண்டு வந்துள்ளோம் இதனையும் நாங்கள் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நான்கு வழி சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனைக் கொள்கை அளவில் நடைமுறைப்படுத்த அரசு ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது. ஆனாலும் அதை இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது. அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்கின்ற முறையில் நானும் இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
இன்று ஒரு சில கோரிக்கை குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. இந்த மூன்று நாள் நடைபெறும் விவாதங்களில் , அனுமதித்தால் சாதி மறுப்பு திருமணத்திற்கு என தனி சட்டம் இயற்ற வேண்டுகோள் வைக்கப்படும். இனி வரும் காலங்களில் எந்த சாதியின் பெயரும் இருக்கக் கூடாது என்பது தான் எங்கள் கொள்கை முடிவு. தூய்மை பணியாளர்கள் தனியார் மையமாக்குவது தொடர்பாக இந்த கருத்து சட்டமன்றத்தில் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் பேசினார்.