நூற்றுக்கும் மேற்பட்டோர் சொந்த வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் பட்டு ( kanchipuram silk sarees )
காஞ்சிபுரம் (Kanchipuram News); கோவில் நகரம் ஆக கருதப்படும் காஞ்சிபுரத்தில் மற்றொரு பெருமை காஞ்சிபுரம் பட்டு. காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்படும் பட்டுப் புடவை வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்கள் சார்ந்த ஏராளமான மக்கள் காஞ்சிபுரம் வருவது வழக்கம். அதே போன்று திருமண புடவைகள் காஞ்சிபுரம் பட்டு புடவை தான் எடுக்க வேண்டும் என மணமகள் மற்றும் மனமகன் வீட்டார் கருதுவதால், முகூர்த்த நாட்களில், திருமணத்திற்கு பட்டுப் புடவை எடுக்க காஞ்சிபுரத்திற்கு பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.
திருமண வீட்டார் பட்டு சேலை எடுக்க
அந்தவகையில் ,ஆனி மாத வளர்பிறை முகூர்த்த நாளை ஓட்டி பட்டுக்கு பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில் திருமண பட்டு சேலைகள் வாங்கிட உள்ளூர், வெளியூர் , வெளி மாநிலம் என பல்வேறு இடங்களில் இருந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ள திருமண வீட்டார் பட்டு சேலை எடுக்க குவிந்து உள்ளனர்.
நிரந்தர தீர்வு காண வேண்டும்
திருமண பட்டு சேலை எடுக்க தங்கள் சொந்த பந்தங்களோடு நூற்றுக்கணக்கான சொந்த வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்துள்ளதால் காஞ்சிபுரம் பிரதான சாலைகளான காந்தி சாலை காமராஜர் சாலை நெல்லுக்கார தெரு செங்கழுநீர் உடை வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. பட்டுச்சேலை கடைகளிலும் ஏராளமான திருமண வீட்டார் ஆர்வத்துடன் பட்டு சேலைகளை தேர்ந்தெடுத்து வாங்கிட குவிந்துள்ளதால் பட்டுச்சேலை விற்பனையும் சூடு பிடித்து உள்ளது. ஆனால் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஈடுபடுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே காஞ்சிபுரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்