Vandalur Zoo : வண்டலூர் போற ப்ளான் இருக்கா? இன்று அருமையான நாள்.. காரணம் இதுதான்..

Vandalur Zoo Open : தொடர் விடுமுறை எதிரொலியாக இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது

Continues below advertisement

வண்டலூர் உயிரியல் பூங்கா ( Arignar Anna Zoological Park (AAZP) ) 
 
சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சுற்றுலா தளமாக, அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து , நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம். 
 
2000 விலங்குகள் ( vandalur zoo animals  ) 
 
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால், வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில், சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது.

Continues below advertisement

 பூங்காவிற்கு விடுமுறை ( vandalur zoo open today )
 
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது.  இந்த நிலையில் தொடர் விடுமுறையின் காரணமாக, கடந்த சில நாட்களாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு  பார்வையாளர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.  குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும்  சுமார் 12,000 மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.  இந்தநிலையில் தொடர் விடுமுறை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இன்றும் அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என பூங்கா நிர்வாகம் எதிர்பார்க்கிறது.  அதன் அடிப்படையில் இன்று  ( 03 - 10 -2023 ) வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமையில் வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை என்றாலும், விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல் விடுமுறை தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

 நிறைவேறிய பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது

தற்பொழுது சிங்கம் உலாவிடத்தில் 7 சிங்கங்கள்  உள்ளன.  மான்கள் உலாவிட பகுதியில் ஏராளமான கடமான், புள்ளிமான் மற்றும் பிற மான் வகைகள் உள்ளன. பார்வையாளர்கள் வசதிக்காக உலா வரும் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் உலாவிட பகுதிக்கு செல்வதற்காக மட்டும் தனி வழியை அமைத்துள்ளது. பார்வையாளர்கள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிகளின் வழியாக மான்கள் உலாவிடத்தை அடையலாம். பாதுகாப்பு சுவர் மற்றும் சுற்றுச்சூழல் சீரமைக்கப்பட்டு குலா மற்றும் நீர்நிலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள உலாவிடத்திற்கு,  செல்லும் வகையில் குளிர்சாதன பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் எளிதான பெற்றுச்செல்லும் வகையில் க்யூ ஆர் கோட் அடிப்படையிலான நுழைச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

லயன் சஃபாரி கட்டணம் எவ்வளவு ? 
 
சஃபாரிக்கு பெரியவர்களுக்கு 150 ரூபாயும் குழந்தைகளுக்கு, 30 ரூபாயும் கட்டணத்தை வசூலிக்க திட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Continues below advertisement