முருகனுக்கு என்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. சென்னையிலும் முருகனுக்கு நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. இவற்றில் வட பழனியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை தீபம், தைப்பூசம் உள்ளிட்ட முருகனுக்கு உகந்த நாட்களில் வடபழனி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருவது வழக்கம்.




இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவிற்காக சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பணிகளை அவ்வப்போது, அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வந்தனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார்.


குடமுழுக்க பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, “ அனைத்து பணிகளும் முடிவு பெற்று கோயில் கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி வரும் ஜனவரி 23-ந் தேதி குடமுழுக்கு நடத்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.




வடபழனி முருகன் கோவிலில் முகூர்த்த நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும். அவ்வாறான நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி திருமணங்கள் நடத்துவதற்கு 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளன. கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்பது குறித்து அப்போதைய கொரோனா கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிச்சயம் அனுமதி அளிக்கப்படும்.”


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் படிக்க : RRR படத்தின் OTT ரிலீஸ் எப்போ தெரியுமா? - படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு !


குடமுழுக்குவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்டுள்ள பகுதிகள், வர்ணம் பூசும் பணிகள், மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  


மேலும் படிக்க : Electric Train : இது ஹேப்பி நியூஸ்..! தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது வழித்தடத்தில் பொங்கல் முதல் மின்சார ரயில்...!



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண