செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர், ரவீந்திரன் நாடார். இவரது இளைய மகள்நிஷாந்தினி (வயது18). இவர் பொன்னேரியில் உள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மழையால் கல்லூரி விடுமுறை விடப்பட்ட தினத்தில் தனது வீட்டிற்கு வந்திருந்தார். அவரது வீட்டில் அவருடைய அக்கா மகா சுபாஷினி என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்தார். இந்நிலையில் அக்கா மூலம் தங்கை நிஷாந்தினிக்கும் டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. நிஷாந்தினிக்கு காய்ச்சல் அதிகமாகி உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் வெள்ளை அணுக்கள் குறைந்து காய்ச்சல் அதிகமாகியது. மயக்க நிலைக்கு சென்ற அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நிஷாந்தினி பரிதாபமாக இறந்தார். குறிப்பாக நிஷாந்தினி வீட்டின் அருகில் சமீப காலமாக டெங்கு கொசுக்கள், அதிகமாக உற்பத்தியாகி பலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். டெங்குவால் கல்லூரி மாணவி இறந்த சம்பவம் கொக்கிலமேடு மீனவர் பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்
டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும்.பழைய டயர், தூக்கி வீசிஎரியபட்ட பூச்சாடி,பிளாஸ்டிக் பைகள்,கேன்களில் தண்ணீர் சேராதவரு பார்க்கவேண்டும்,.தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி விடவேண்டும். நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட்டில் ஏசி, குளிர்சாதனப்பெட்டி மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்கமல் அவ்வபோது நீக்கி விடவேண்டும்.
கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளை பயன்படுத்தலாம்,.. வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்து கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகபடுத்தலாம்.. ஆனால் சிலருக்கு இது சுவாச அலர்ஜி ஏற்படுத்தலாம். உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகபடுத்தலாம். அனால் தோல் அலர்ஜி இது உண்டு பண்ணலாம். இந்த கொசு பகல் நேரத்தில் அதிகம் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும் .
அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம். நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வா வை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்