செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்து செங்கல்பட்டு நீதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த சுஷில் ஹரி பள்ளி நிர்வாகியாக செயல்படும் சிவசங்கர் பாபா தன்னை கடவுள் என்றும் தான் கிருஷ்ணர் என்றும் கூறி வந்தார். சிவசங்கர் பாபாவின் ஆசிரமத்தின் சொத்து மதிப்பு சுமார் 700 கோடி அளவிற்கு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தன்னைத் தானே கடவுள் என்று கூறிவரும் சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாளர்களும் அதிக அளவு இருந்து வருகின்றனர்.



 

தன்னை தானே கடவுள் என்று சொல்லிக் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிவசங்கர்  பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன , சிவசங்கர் பாபாவிற்கு என்று இருக்கும் தனி அறையில் சில பெண்களுடன் ஆபாசமாக இருந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு வீடியோ கால் செய்ததாக ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 



சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா பல வருடங்களாக பயன்படுத்தி வந்த இமெயில் கணக்கு அவற்றின் மூலம் ஆய்வு செய்ததில் ஆதாரங்கள் சிக்கியுள்ளது. மேலும் ஈமெயில் மூலமாக சில மாணவிகளிடம் ஆபாச சேட்டில் ஈடுபட்டதாக ஆதாரங்கள் ஆகியவை கிடைத்துள்ளது இதனை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உள்ளனர். தன்னை தானே கடவுள் என்று சொல்லிக்கொண்டு இருந்த சிவசங்கர் பாபாவின் 700 கோடி சொத்துக்காக அவருடைய ஆதரவாளர்கள் தற்போது மறைமுக சண்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



 

இந்நிலையில் 27 ஆண்டுகளாக சிவசங்கர் பாபாவின் பக்தராக இருந்து வரும் ரமேஷ் என்பவர், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் “அப்பள்ளியின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு ஜானகி சீனிவாசன் என்பவருடன் கோபித்துக்கொண்டு சிவசங்கர் பாபா யாத்திரை சென்ற பிறகுதான் மொட்டை அடித்தார். சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருக்கும்போது மொட்டை அடிக்கவில்லை. மேலும் சிவசங்கர் பாபா எந்த கட்சியை சார்ந்தவரும் இல்லை அவர் அனைவருக்கும் பொதுவானவர். ஆனால் ஜானகி என்பவர் திட்டமிட்டே சிவசங்கர் பாபாவின் மீது சாயத்தை பூச வேண்டும் என்ற நோக்குடன் ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்த வரை வழக்கறிஞராக வைத்துள்ளார்” என குற்றம்சாட்டினார்.


ஜானகி சீனிவாசன் வைத்துள்ள வழக்கறிஞரை மாற்றவேண்டும். இவர் பணத்திற்கு ஆசைப்பட்டு இவ்வாறு செய்கிறாரா என சந்தேகம் எழுகிறது. பாபாவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என தெரிவித்தார். மேலும் பாபாவின் ஆன்மாவிற்கு அழிவில்லை எனவும் அவருடைய சரீரத்திற்கு ஏதாவது ஏற்பட்டுவிடும் என அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நிருபர்கள் எழுப்பிய சரமாரி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பி பேட்டியை முடித்துக் கொண்டனர். சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை வழக்கில் ஆதாரங்கள் கிடைத்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் எனக் கூறிக்கொண்டு  பக்தர்கள் பேட்டி என்ற பெயரில் செய்தியாளர் சந்திப்பை நடந்தி வருகிறார்கள்.