காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் 70 க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இயங்கி வரும் கல்குவாரிகள் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகள் மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் சுற்றியுள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த கல் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.



 

தற்பொழுது ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் எம்.சாண்ட் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள கல் குவாரிகள் வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகிறது.



 

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் வட்டம், உத்திரமேரூர் அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் இயங்கி வரும் ஆர்.எஸ் மைன்ஸ் என்ற கல்குவாரியில் சென்னையை பகுதியை சேர்ந்த செல்வேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான  ஆர்எஸ் மைன்ஸ் என்ற பெயரில் கல்குவாரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் அறவை இயந்திரத்தைப் பயன்படுத்தி எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது.

 



 

இந்நிறுவனத்தில் தமிழ்நாடு மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் . இந்த நிறுவனத்தில் உத்திர பிரதேசம் பகுதியை சேர்ந்த ஷேர்கான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில்ஷேத்திரி ஆகியோர் ஜேசிபி எனப்படும் எந்திரத்தை இயக்கும்  ஆபரேட்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

 



 

நேற்று மாலை ஆறு மணியிலிருந்து அப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று நேற்று மாலை 6 30 இருவரும் இயந்திரம் அருகே சென்று பராமரிப்பு பணி மேற்கொள்ள சென்றபோது திடீரென மண்சரிந்து சுமார் 30அடியில் மண்புதையில் சிக்கினர். இதை கண்ட மற்றொரு ஊழியர் தமிழ்வாணன் கூச்சலிட்டு அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து சாலவாக்கம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் பேரில் ஆய்வாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கும் , வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

 



 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

விபத்து பகுதியில் போதிய வெளிச்சம் இன்மை மற்றும் தொடர் மழை காரணமாக மீட்பு பணிகளை அதிகாலையிலிருந்து தொடங்க முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவிட்டார். மணலில் சிக்கியவர்கள் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து உடல்களை மீட்பது குறித்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது . இன்று காலை முதல் மீட்பு பணி துவங்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மண் சரிந்து இரண்டு பேர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது..