தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. பல்வேறு கோயில்களை சார்ந்த, புண்ணிய தீர்த்தங்கள் மற்றும் பிரசாதங்கள் கொண்டுவரப்பட்டு பந்தல்கால் நடும் விழா நடந்தேறி உள்ளது.


 


தவெக மாநாடு - TVK Manadu 


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி. சாலை பகுதி வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டிற்கு பந்தல் கால் நடுதல் வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதிகட்சிக் கொடியையும், கொடிப்பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மாநில மாநாடு விரைவில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் வருகின்ற 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.




பந்தல்கால் நடும் விழா


இதைத்தொடர்ந்து வி. சாலை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாநில மாநாட்டுக்கான பந்தல் கால் நடும்விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தல் கால் நடப்பட்டது. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பந்தல்கால் நடப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.




பேனரில் இடம்பெற்ற தலைவர்களின் புகைப்படம் 


இதையொட்டிதமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மாவட்ட கோயில்களில் இருந்து தீர்த்தங்களை கொண்டு வந்தனர். பந்தல்கால் நடுவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன் காரணமாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் போக்குவரத்தை சரி செய்தனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பேனரில், அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. 




காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் சென்டிமென்ட்


 


விஜயின் தாய் தந்தை ஆகியோருக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலாக செண்டிமெண்ட் கோயிலாக இருந்து வருகிறது. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் அவ்வப்போது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டு வருவதும் வழக்கமாக இருக்கிறது. இந்த வகையில் இன்று நடைபெற்ற பூமி பூஜையில் காமாட்சி அம்மன் கோயில், தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வைத்து பூமி பூஜை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த செண்டிமெண்ட் தாய் தந்தைக்கு மட்டுமா அல்லது விஜய்க்கும் இந்த சென்டிமென்ட் இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஆதிபராசக்தி கோயிலில்.. 


மேலும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில், திரிசூலத்தை வைத்து பூஜை செய்து மாநாட்டு திருடனுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தவெக கட்சி நிர்வாகிகள் , அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திரிசூலநாதர் சுவாமி கோவிலில் இருந்து 108 கலசங்களில் புனித நீர் எடுத்துக் கொண்டு வந்து பந்தக்கல் நடப்பட்டதில் ஊற்றப்பட்டது. ஒருபுறம் பெரியார் புகைப்படம் மற்றொருபுறம் கடவுள் சென்டிமென்ட் உடன் மாநாடு மேடை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.