சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியில், அதிகபட்ச பார்வையாளர்கள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சி முறியடிக்க வேண்டுமென விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சென்னையைச் சேர்ந்த கேப்டன்கள் சித்தீஷ் கார்த்திக் மற்றும் அஜய் சாரதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் சென்னையில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. அதன்படி, மெரினா கடற்கரையில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதற்கான பயிற்சியை விமானப்படை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், சென்னை வான்பரப்பில் நண்பகல் நேரங்களில் விமானங்கள் சீறிப்பாய்ந்து பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.
72 விமானங்கள்
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசால் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அக்டோபர் 5 ஆம் தேதி நிகழ்ச்சியின் ஒத்திகை நடத்தப்படுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 6ம் தேதி பிரதான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரண்டு நாட்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை பொதுமக்களும் கண்டுகளிக்கலாம். மொத்தம் 72 விமானங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. இதனை நேரில் கண்டுகளிக்க 15 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் இந்திய விமானப்படையின் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டரில் சென்னையில், நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் முதல் முறையாக விமான சாகச காட்சி நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விமான கேப்டன்கள் தாங்கள் கலந்து கொள்வதில் பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானப்படையை சார்ந்த சித்தீஷ் கார்த்திக் மற்றும் அஜய் சாரதி தெரிவித்ததாவது: கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெறும் போது கல்லூரி பயின்ற நாங்கள், தற்போது விமான சாகசத்தில் கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சி மற்றும் பெருமையாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த விமான சாகச நிகழ்ச்சி பார்க்கும் இளைஞர்கள் அனைவருக்குமே இந்திய விமானப்படையில், சேர்வதற்கு ஆர்வம் அதிகமாக ஏற்படும் என்பதை எனக்கு நம்பிக்கை உள்ளது.
பிரமிக்கும் வகையில் நடைபெற உள்ளது
இந்தியாவில் உள்ள மொத்தம் 72 சாகச விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறது. போர் விமானங்கள் மற்றும் இந்திய ராணுவ விமானங்கள் என அனைத்து ரகத்திலும் ஒன்று சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறது.
தற்போது சென்னையில் நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழுவினர்தான் உலகக்கோப்பை நிகழ்ச்சியில் சாகச நிகழ்ச்சியை நடத்தியது அதைவிட, சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 3 வண்ண கலர் உடன் பிரம்மிக்கும் வகையில் சாகசம் நடைபெறும்.
உலகத்திலேயே யுனைடெட் கிங்டம், கனடா, இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அடுத்து இந்தியாவில் தான் சாகச விமானம் உள்ளது. 19 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் இருந்த போதிலும் தாய் மண்ணில் விமான சாகசம் மேற்கொள்வது, எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த விமான சாகச நிகழ்ச்சியில் 15 லட்சத்துக்கு மேல் பட்ட பார்வையாளர்கள் கடந்தால் உலக சாதனையை முறியடிக்கும் அது நமது மெரினா கடற்கரை நமக்கு சாதகமாக இருக்கும். பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சி நிகழ்த்த ஒன்றிய வேண்டுமென விமான படை கேப்டன் வீரர்கள் கோரிக்கை விடுத்து, ஒரகடத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.