Train Cancelled: சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 84 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


ரயில் சேவை:


சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  அதேபோன்று சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 


ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:


இந்நிலையில், சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 84  மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆவடி, அரக்கோணம், கடம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதனப்டி, இன்றிறவு 9.25, 10.25 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் செல்லும் மின்சார ரயில், இரவு 10 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் இரவு 10.20, 11.15 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.  அதேபோல, இரவு 10.20 மணி, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில், இரவு 11.45 மணிக்கு மூர்மார்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில், இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் செல்லும் ரயில், இரவு 8.50 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர்மார்கெட்டிற்கு வரும் ரயில், இரவு 10.45 மணிக்கு பட்டாபிராமில் இருந்து மூர்மார்க்கெட் வரும் ரயில், இரவு 11.55 மணிக்கு பட்டாபிராமில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயல்கள் ரத்து செய்யப்படுகிறது. 


இதேபோல, மறுமார்க்கமாக பட்டாபிராமில் இருந்து காலை 3.20, 5.30, 6.35, 7.40, 8.45 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்கள், ஆவடியில் இருந்து காலை 3.50, 4.00, 4.25, 6.10, 6.40, 9.15 மணிக்கு சென்னை மூர்மார்ககெட் புறப்படும் ரயில்கள், ஆவடியில் இருந்து சென்னை  கடற்கரைக்கு காலை 4.10, 4.35, 6.00, 7.05, 7.40, 7.55, 8.45 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.


அதேபோல, திருவள்ளூரில் இருந்து காலை 3.50, 4.45, 5.55, 6.50, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 3.45, 4.25, 5.25, 6.40, 7.10, 8.15 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், திருத்தணியில் இருந்து காலை 4.30, 5.30, 7 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 




மேலும் படிக்க


Assembly Elections 2023: மத்திய பிரதேசத்தில் 71.16, சத்தீஸ்கரில் 68.15.. ஆங்காங்கே வன்முறை.. பதிவான வாக்கு சதவீதம் விவரம்!