வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி, சென்னை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை 6 மணி வரை பெசன்ட் நகரில் 7ஆவது நிழற்சாலையில் இருந்து 6ஆவது நிழற்சாலை வரை, எலியட்ஸ் கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


வாகனங்கள் அனைத்தும் 16ஆவது குறுக்குத் தெரு வழியாக 2ஆவது நிழற்சாலை நோக்கி திருப்பிடவிடப்பட உள்ளது. 3ஆவது மெயின் ரோட்டில் இருந்து 6ஆவது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 3ஆவது மெயின் ரோடு மற்றும் 2ஆவது நிழற்சாலை சந்திப்பில் வாகனங்கள் அனைத்து திருப்பிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நினைவூட்டும் பொருட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 'மெட்ராஸ் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. 


 






தற்போது தில்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னை நான்காவது மிகப்பெரிய நகரமாக இருக்கிறது. உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா, மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு, வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை, தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் ஆகிய கட்டங்களை கொண்டிருக்கிறது. 


நாட்டின் முக்கிய நகரமான சென்னை, பொருளாதாரத்திலும் சமூக அளவிலும் மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது. ஏனெனில், இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்னையாக மாறிய நகரத்திற்கு என ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது.


நவீன வரலாற்றை பொறுத்தவரையில், 1639இல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து  செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண