இரயில் நிலையம் அல்லது விமான நிலையம் உள்ளிட்டவற்றில் ஓய்வறைகள் இருப்பது பயனிகளுக்கு ரொம்பவே வசதிதானே. ஏனெனில், விமான போக்குவரத்தில் கனெக்டிங் பிளைட் அல்லது கனெக்டிங் டிரெயின் இருக்கும். இடைப்பட்ட நேரத்தில் அருகே உள்ள ஹோட்டல்களில் தங்க வேண்டிய அவசியம் என்பது இல்லை. இரயிவே நிலையங்களில் காத்திருப்பு அறைகள் இருக்கும். அங்கேயும் தூங்கும் வசதியெல்லாம் கிடையாது. இப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ‘Sleepzo’ என்ற குறைந்த நேரத்திற்கு (domestic arrival of Chennai International Airport ) ஓய்வு எடுக்கும் அறையை அறிமுகம் செய்துள்ளது.
உள்நாட்டு விமான நிலையம் வருகை பகுதியில் புதிய அதிநவீன ஸ்லீப்பிங் பாட்ஸ் (sleeping pods ) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானங்களில் பயணிப்பவர்கள் ,பிற நகரங்களுக்கு செல்வதற்காக காத்திருக்கும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒய்வு எடுக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கொண்ட படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிநவீன கேப்சூல் படுக்கைகளை ( four bed-sized capsules) சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விமான நிலைய இயக்குநர், " இந்த அதிநவீன வசதி சோதனை அடிப்படையில் 4 படுக்கைகள் கொண்ட கேப்சூல் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரம் ஓய்வெடுக்க படுக்கை வசதி தேவைப்படும் பயணிகள் ஆன்லைன் முலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
விமான பயணிகள் தங்களின் விமான டிக்கெட், போர்டிங் பாஸ், பி.என்.ஆர். நம்பரை வைத்து Sleepzo வசதியை பயன்படுத்த முன்பதிவு செய்ய முடியும். விமான பயணிகள் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படமாட்டாது. இந்த வசதிக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Sleepzo Pod-ல் படுக்கையில் ஒரு பயணியும், 12 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தையும் ஒய்வு எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்