மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர்களுக்கு கடை மற்றும் கடன் உதவிக்கான ஒப்பந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் வழங்கினார்.


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி  இருளர் மற்றும் நரிக்குறவர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இலவச வீடு  தமிழக முதல்வர் அவர்களால் நாகப்பட்டது. அதேபோல நலவாரிய அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இதுவரை அங்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் சாலை கழிவறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இதனை அடுத்து நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததின் பெயரில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கடன் உதவி வழங்குவதற்காக, PMEGP என்ற திட்டத்தின் கீழ் கடன் வழங்க வேண்டும் என்றால் அவர்கள் கட்டாயமாக கடை எடுத்து நடத்த வேண்டும். அதில் வாடகையாவது இருக்க வேண்டும் என்பது விதியாகும்.



இது போன்ற கடனுதவி 8 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கடை இல்லாத காரணத்தினால் அந்த கடன் உதவி கிடைக்கப்பெறாமல் இருந்தது. நேற்றைய தினம் அஸ்வினி என்னை நேரடியாக சந்தித்து,  கடை ஒதுக்க கோரிக்கை வைத்தார். அதேபோல கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே தொடர்ந்து இது சம்பந்தமான கோரிக்கை இருந்து வந்தது. ஏற்கனவே இது தொடர்பாக கடைகள் கட்டப்பட்டுள்ளது. அஸ்வினி இந்த கடைகள் போதாது என தெரிவித்திருந்தார். இன்றைய தினம் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு கடை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் ஊரில் இல்லாததால் அவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.




அதனை அடுத்து கடனுதவி வேண்டுமென, 8 பேர் கோரி இருந்தனர், அவர்களில் ஐந்து பேருக்கு  ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது, நாளை வங்கிகள் விடுமுறை  என்பதால் நாளை மறுநாள் அவர்களுக்கு பணம் வங்கி கணக்கில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கிருக்கும் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என  ஆட்சியர் தெரிவித்தார்.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண