அலுவலகம் செல்வோர் கவனத்திற்கு...சென்னையில் நாளை (பிப்.3) போக்குவரத்து மாற்றம்!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணி நடைபெறவிருப்பதையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் பற்றிய அறிவிப்பு.

Continues below advertisement

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை நினைவு தினத்தை தமிழ்நாடு அரசு சார்பில் அமைதிப் பேரணி நடைபெறவிருப்பதையொட்டி சென்னையில் நாளை ( திங்கள்கிழமை - 03.02.2025 ) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

 இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நாளை (03.02.2025) அன்று காலை 08.00 மணியளவில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு  தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் வாலாஜா சாலை அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை மெளன் ஊர்வலம் செல்ல இருக்கின்றனர்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

” *போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

 * கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு இராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

* பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்ணிே நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாசுனங்கள் உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை மற்றும வாலாஜா சாலை × திருவல்லிகணிே நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு அண்ணா சிலை வழியாக செல்லலாம்.

* மெளன ஊர்வலம் வாலாஜாயில் வரும் போது வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

அதனால்,  காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்காஸ சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது வாகன ஒட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.”என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement